அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இரவுத்தொழுகை ரக்அத்களின் எண்ணிக்கை-1


தினம் ஒரு ஹதீஸ்-212

நோன்பு காலமென்றாலும், பிற காலங்களென்றாலும் இரவுத்தொழுகையின் நேரமானது இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து ஃபஜ்ர் பாங்கு சொல்லப்படும் வரையுள்ளது, இந்த இடைப்பட்ட நேரத்தில் ஒருவர் தாம் விரும்பும் எந்நேரத்திலும் இரவுத்தொழுகையை நிறைவேற்றலாம், இந்த இடைப்பட்ட நேரத்தில் ஒரு இரவுத்தொழுகை மட்டும் தான் உண்டு, சிலர் செய்வது போல் இஷாவிற்குப் பின் ஒரு இரவுத்தொழுகை (தராவீஹ்(?)), இரவின் கடைசிப் பகுதியில் ஒரு இரவுத்தொழுகை (தஹஜ்ஜுத்) என்றெல்லாம் கிடையாது.
இரவுத்தொழுகையானது மார்க்கம் காட்டியுள்ள எண்ணிக்கையின்படி தான் தொழ வேண்டும், நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத 20+3 ரக்அத்கள் தொழுவது பித்அத் ஆகும், அதே போல் 8+3 ரக்அத்களுக்கு ஆதாரம் இருப்பினும் இரவுத்தொழுகை என்றால் 8+3 ரக்அத்கள் மட்டும் தான் என்று கூறினால் அதுவும் தவறாகும், நபி (ஸல்) அவர்கள் பல்வேறு எண்ணிக்கைப்படி தொழுதுள்ளார்கள், அதில் ஒருவர் தாம் விரும்பும் எதையும் எடுத்துக்கொள்ளலாம்.

10+1 ரக்அத்கள்:

وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِيمَا بَيْنَ أَنْ يَفْرُغَ مِنْ صَلاَةِ الْعِشَاءِ – وَهِيَ الَّتِي يَدْعُو النَّاسُ الْعَتَمَةَ – إِلَى الْفَجْرِ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يُسَلِّمُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ وَيُوتِرُ بِوَاحِدَةٍ فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُ مِنْ صَلاَةِ الْفَجْرِ وَتَبَيَّنَ لَهُ الْفَجْرُ وَجَاءَهُ الْمُؤَذِّنُ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلإِقَامَةِ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1340

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்அத்தமா” என மக்கள் அழைக்கும் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து ஃபஜ்ர் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள்; ஒவ்வோர் இரண்டு ரக்அத்களுக்கும் இடையில் ஸலாம் கொடுப்பார்கள்; ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள். வைகறை வெளிச்சம் படர்ந்து, தொழுகை அழைப்பாளர் ஃபஜ்ருத் தொழுகைக்கு அழைத்து முடித்ததும் எழுந்து, சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுவார்கள்; பிறகு ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றுவதற்காக(த் தம்மை அழைக்க) முஅத்தின் வரும் வரை வலப்பக்கமாகச் சாய்ந்து படுத்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1340

‘A’isha (ra), the wife of the Apostle of Allah (sal), said that between the time when the Messenger of Allah (sal) finished the ‘Isha’ prayer which is called ‘Atama by the people, he used to pray eleven rak’ahs before the Fajr Prayer, uttering the salutation at the end of every two rak’ahs, and observing the Witr with a single one. And when the Mu’adhdhin had finished the call (for the) dawn prayer and he saw the dawn clearly, he stood up and prayed two short rak’ahs. Then he lay down on his right side till the Mu’adhdhin came to him for lqama.
[Muslim 1340]

நோன்பு சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேலும், தொடர்புடைய பிற பதிவு: நோன்பு திறப்பதைத் தாமதிக்கக் கூடாது…


Blogger Widget