அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

நரகில் சேர்க்கும் பித்அத்…


தினம் ஒரு ஹதீஸ்-125

அல்லாஹ்வும், அவனது தூதரும் மார்க்கமாக்கிய செயல்களைத் தவிர்த்து வேறு செயல்களை மார்க்கம் என்ற பெயரில் செய்வது பித்அத் எனப்படும், மார்க்கம் கூறாத ஒன்றை மார்க்கத்தில் உள்ளது போல் செய்யும் ஒவ்வொரு செயலுமே நரகத்தில் சேர்த்து விடும்.
نا الْحُسَيْنُ بْنُ عِيسَى الْبِسْطَامِيُّ، نا أَنَسٌ يَعْنِي ابْنَ عِيَاضٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ. ح وَحَدَّثَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أنا سُفْيَانُ، عَنْ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ : يَحْمَدُ اللَّهَ, وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ لَهُ أَهْلٌ, ثُمَّ يَقُولُ مَنْ يَهْدِ اللَّهُ فَلا مُضِلَّ لَهُ, وَمَنْ يُضْلِلْ فَلا هَادِيَ لَهُ, إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ, وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ, وَشَرَّ الأُمُورِ مُحْدَثَاتُهَا, وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ, وَكُلَّ بِدْعَةٍ ضَلالَةٌ, وَكُلَّ ضَلالَةٍ فِي النَّارِ
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺧﺰﻳﻤﺔ 1689

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உரையின் போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கு ஏற்ப புகழ்ந்து விட்டு, “அல்லாஹ், யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரை வழிகெடுப்பவர் எவருமில்லை. அவன் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் எவருமில்லை. செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: ஸஹீஹ் இப்னு குஸைமா 1689

Narrated Jabir bin ‘Abdullah (ra):
“In his Khutbah the Messenger of Allah (sal) used to praise Allah as He deserves to be praised, then he would say: ‘Whomsoever Allah guides, none can lead him astray, and whomsoever Allah sends astray, none can guide. The truest of word is the Book of Allah and best of guidance is the guidance of Muhammad. The worst of things are those that are newly invented; every newly-invented thing is an innovation and every innovation is going astray, and every going astray is in the Fire.
[Sahih Ibn Khuzaymah 1689]
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
திருக்குர்ஆன் 5:3
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 49:16
அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.
திருக்குர்ஆன் 42:21
Blogger Widget