அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

மரணத் தருவாயில் உள்ளவருக்காக பிறர் செய்ய வேண்டியது...


தினம் ஒரு ஹதீஸ்-130

மரணத் தருவாயில் உள்ளவரிடம் பிறர் ஏகத்துவ உறுதிமொழியான லாயிலாஹ இல்லல்லாஹ்வை கூறச் சொல்ல வேண்டும், அப்படி அவர் இறப்பதற்கு முன் கூறிய கடைசி வார்த்தைகள் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்றாகிவிடுமானால் அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிடும். அல்லாஹ் மன்னித்து அருள்புரிந்து விடுவானேயானால், நரகம் செல்லாமல் சொர்க்கம் செல்லவும் வாய்ப்புண்டு, இதர பாவங்களுக்காக தண்டிப்பதாக அல்லாஹ் முடிவெடுப்பானேயெனில், நரகத்தில் போட்டு அவன் நாடிய காலத்திற்குப் பின் சொர்க்கம் தருவான். இறப்பதற்கு முன்பாக “லாயிலாஹ இல்லல்லாஹ்” கூறிய காரணத்தினால் நிரந்தர நரகம் கிடைக்காது. அல்லாஹ் நமக்கு நல்லதையே கொடுப்பான் என்று அவன் மீது நல்லெண்ணம் கொண்ட நிலையிலேயே நாம் மரணிக்க வேண்டும், லாயிலாஹ இல்லல்லாஹ்வை மரணத் தருவாயில் உள்ள முஸ்லிமிடம் மட்டும் தான் கூறச் சொல்ல வேண்டும் என்பது கிடையாது, நமக்குத் தெரிந்த முஸ்லிமல்லாதவர்களிடமும் கூறச் சொல்லலாம்.
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الشَّرْقِيِّ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، قَالَ : حَدَّثَنَا الثَّوْرِيُّ ، عَنْ مَنْصُورٍ ، عَنْ هِلالِ بْنِ يَسَافٍ ، عَنِ الأَغَرِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَقِّنُوا مَوْتَاكُمْ لا إِلَهَ إِلا اللَّهُ ، فَإِنَّهُ مَنْ كَانَ آخِرُ كَلِمَتِهِ لا إِلَهَ إِلا اللَّهُ عِنْدَ الْمَوْتِ ، دَخَلَ الْجَنَّةَ يَوْمًا مِنَ الدَّهْرِ ، وَإِنْ أَصَابَهُ قَبْلَ ذَلِكَ مَا أَصَابَهُ

3080 ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺣﺒﺎﻥ

உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு “லாயிலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லிக் கொடுங்கள், மரணிக்கும் போது எவரது கடைசிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார். இதற்கு முன்பு அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 3080

Narrated Abu Hurairah (ra):
Allah’s Messenger (sal) as saying: Exhort your dying ones to say “Laa Ilaaha Illallah” (There is no god but Allah), for if a person’s last words are Laa ilaaha illallah at the time of death, he will enter Paradise at some point, no matter what befalls him before that. 
[Ibnhibban 3080]
Blogger Widget