அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இவ்வுலகில் நாம் செய்த செயல்கள் மட்டுமே மறுமையிலும் நம்முடன் வரும்…


தினம் ஒரு ஹதீஸ்-405

நமது மறுமை வாழ்வு நல்ல விதத்தில் அமைய வேண்டுமென்று விரும்பினால் அதற்கு நாம் தான் முயற்சி செய்ய வேண்டும், ஏனெனில் இவ்வுலகில் நாம் செய்த நற்செயல்கள் மட்டுமே மறுமையிலும் நம் கூட வரும், இன்று நம்முடன் இருக்கும் நமது குடும்பத்தினர்கள் நாளை வரமாட்டார்கள், நாம் சேமித்த செல்வங்களும் நம்முடன் வராது, அவைகளுடனான நமது பந்தம் இவ்வுலகத்தோடு முடிவடைந்து விடும், மண்ணறையில் நம்மைத் தனியாக விட்டு விட்டு அனைவரும் சென்று விடுவார்கள், எனவே நம்முடன் மறுமையிலும் வரும் நற்செயல்கள் புரிவதில் ஆர்வம் காட்ட வேண்டும்…
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ هُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ الْأَنْصَارِيُّ، قَال : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ, يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتْبَعُ الْمَيِّتَ ثَلَاثٌ فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى وَاحِدٌ ، يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ ، فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ ، وَيَبْقَى عَمَلُهُ
‎‏

ﺟﺎﻣﻊ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 2313‎‏

இறந்துபோனவரைப் பின்தொடர்ந்து மூன்று பொருட்கள் செல்கின்றன. அவற்றில் இரண்டு திரும்பிவிடுகின்றன; ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: திர்மிதீ 2313

Anas bin Malik (ra) reported Allah’s Messenger (sal) as saying: Three things follow the bier of a dead man. two of them come back and one is left with him: the members of his family. wealth and his-good deeds. The members of his family and wealth come back and the deeds alone are left with him.
[Tirmidhi 2313]
Blogger Widget