அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

உரை நிகழ்த்துபவர்களுக்காக…


தினம் ஒரு ஹதீஸ்-400

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَحَجَّاجٌ، قَالَا : حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ : أَنْبَأَنَا أَبُو إِسْحَاق، قَالَ : سَمِعْتُ أَبَا عُبَيْدَةَيُحَدِّثُ ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ ‏عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطْبَةَ الْحَاجَةِ‏‎‏ ‏الْحَمْدُ لِلَّهِ أَوْ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا ، مَنْ يَهْدِهِ اللَّهُ ، فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ ، فَلَا هَادِيَ لَهُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ‏‎‏ ‏ثُمَّ يَقْرَأُ ثَلَاثَ آيَاتٍ‏‎‏ ‏يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا‏‎‏ ‏ثُمَّ يَتَكَلَّمُ بِحَاجَتِهِ
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ 2134

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (ஏதேனும்) தேவையினிமித்தம் உரை நிகழ்த்தும் முன் கூற வேண்டிய வாசகங்களைக் கற்றுத்தந்தார்கள். (அவ்வாசகங்களாவன:)அல்ஹம்துலில்லாஹி / இன்னல்ஹம்துலில்லாஹி நஹ்மதுஹூ வநஸ்தயீனுஹூ வநஸ்தஃபிருஹூ வநவூதுபில்லாஹி மின்ஷூருரி, அன்புஸினா, மன்யஹ்தில்லாஹூ ஃபலாமுழில்லஹூ வமன்யுழ்லில் ஃபலா ஹாதியலஹூ. அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹூ வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ(புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! / நிச்சயமாக, புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனிடமே உதவி தேடுகிறோம். அவனிடமே பாவமன்னிப்பு தேடுகிறோம். எங்கள் உள்ளங்களின் தீங்குகளை விட்டும், நாங்கள் செய்த தீங்குகளிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவனை வழிகெடுப்போன் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிதவறச் செய்து விட்டானோ அவனுக்கு நேர்வழி காட்டுவோன் யாரும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்.) இதற்குப் பின் அல்குர்ஆனின் பின்வரும் மூன்று வசனங்களை ஓதினார்கள்: யா அய்யுஹல்லதீன் ஆமனூ இத்தகுல்லாஹ் ஹக்கதுகாதிஹி வலா தமூதுன்ன இல்லா வஅன்தும் முஸ்லிமூன். (3:102) (நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!)யா அய்யுஹன்னாஸுத்தகூ ரப்பகுமுல்லரீ கலககும் மின்னஃப்ஸின்வ் வாஹிததின் வகலக மின்ஹா ஸவ்ஜஹா வபஸ்ஸ மின்ஹுமா ரிஜாலன் கஸுரன்வ் வநிஸா வத்தகுல்லாஹல்லரீய் தஸாஅலூன பிஹி வல்அர்ஹாம் இன்னல்லாஹ கான அலைக்கும் ரகீபா (4:1) (மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.) யா அய்யுஹல்லதீன் ஆமனூ இத்தகுல்லாஹ் வகூலூ கவ்லன், ஸதீதா யுஸ்ஸிஹ் லகும் அஃமாலகும் வயஃபிர் லகும் துனூபக்கும் வமன்யுதியில்லாஹ வரசூலஹூ ஃபகத் ஃபாஜ ஃபவ்ஜன் அளீமா (33:70,71) (நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.) பின்னர் தமது உரையை நிகழ்த்தினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: தாரமீ 2134

Narrated Abdullah bin Mas’ud (ra):
The Messenger of Allah (sal) taught us the address in case of some need: Al-hamdu Lillaahi / Inal-hamdu Lillaahi nahmaduhu wanasta’eenahu wa nastaghfiruhu, wa na’oodhu billaahi min shuroori anfusinaa. Man yahdih Illaahu falaa mudilla lahu wa man yudlil falaa haadiya lahu. ashhadu an laa ilaaha ill-Allaah wa ashhadu anna Muhammadan ‘abduhu wa rasooluhu. (Praise be to Allah / Indeed, Praise be to Allah from Whom we ask help and pardon, and in Whom we take refuge from the evils within ourselves. He whom Allah guides has no one who can lead him astray, and he whom He leads astray has no one to guide him. I testify that there is no god but Allah, and I testify that Muhammad is His servant and Apostle). And then he read three verses: “Yaa ayyuha’lladheena aamanu-ttaqu’Llaaha haqqa tuqaatihi wa laa tamootunna illaa wa antum muslimoon (3:102) (you who believe, fear Allah as He should be feared, and die only as Muslims) “Yaa ayyuha’n-naas uttaqu rabbakum alladhi khalaqakum min nafsin waahidatin wa khalaqa minhaa zawjahaa wa baththa minhumaa rijaalan katheeran wa nisaa’an wa’ttaqu-Llaah alladhi tasaa’aloona bihi wa’l-arhaama inna Allaaha kaana ‘alaykum raqeebaa” (4:1) (O mankind! reverence your Guardian-Lord, who created you from a single person, created, of like nature, His mate, and from them twain scattered (like seeds) countless men and women;-reverence Allah, through whom ye demand your mutual (rights), and (reverence) the wombs (That bore you): for Allah ever watches over you) “Yaa ayyahu’lladheena aamanu-ttaqu’Llaaha wa qooloo qawlan sadeedan. Yuslih Lakum ‘A’maalakum Wa Yaghfir Lakum Dhunoobakum Wa Man Yuti’i Allaaha Wa Rasoolahu Faqad Faaza Fawzaan ‘Azeemaa” (33:70,71) (O who believe, fear Allah and say what is true. He will make your deeds sound, and forgive your sins. He who obeys Allah and His Apostle has achieved a mighty success.) and then he delivered the khutba.
[Darami 2134]
Blogger Widget