அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அத்தஹிய்யாத் அமர்வில் ஓத வேண்டிய துஆ -3


தினம் ஒரு ஹதீஸ்-362

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، قَالَ : حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ عَمِّهِ الْمَاجِشُونِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ مِنَ الصَّلَاةِ قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ ، وَمَا أَسْرَفْتُ ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي ، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 1292

நபி (ஸல்) அவர்கள், தொழுகையில் ஸலாம் கொடுக்கும் போது, அத்தொழுகையின் இறுதியில் (அதாவது, கடைசி அமர்வில் அத்தஹிய்யாத், ஸலவாத் ஓதிய பின்பு)அல்லாஹும்மஃக்ஃபிர்லீ மா கத்தம்த்து வ மா அக்கர்த்து வ மா அஸ்ரர்து வ மா அஃலன்து வ மா அஸ்ரஃப்த்து வ மா அன்த அஃலமு பிஹி மின்னீ. அன்த்தல் முகத்திமு வ அன்த்தல் முஅக்கிரு லா இலாஹ இல்லா அன்த்த” (யா அல்லாஹ்! நான் முந்திச் செய்த பிந்திச் செய்கிற, இரகசிமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த, வரம்பு மீறிச் செய்த, என்னைவிட நீ அறிந்துள்ள (இன்னபிற) பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக! நீயே முன்னேறச் செய்பவன். பின்னடைவைத் தருபவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை)என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி)
நூல்: அபூதாவூத் 1292

Narrated Ali bin Abi Talib (ra):
When the Prophet (sal) saluted at the end of the prayer, he said: “Allahum-maghfir li ma qaddamtu wa ma akh-khartu, wa ma asrartu, wa ma a’lantu, wa ma asraftu, wa ma Anta a’lamu bihi minni. Antal-Muqqadimu, wa Antal-Mu’akh-khiru. La ilaha illa Anta” (O Allah, forgive me my former and my latter sins, my open and secret sins, my sins in exceeding the limits, and what Thou knowest better than I. Thou art He Who puts forward and puts back. There is deity but Thee.)
[Abudawud 1292]

Blogger Widget