அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

கூட்டுக் குர்பானி…


தினம் ஒரு ஹதீஸ்-295

ஆட்டில் கூட்டுக் குர்பானி இல்லை, ஆட்டை ஒருவர் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும், மாடு, ஒட்டகம் ஆகியவற்றை கூட்டுக் குர்பானி கொடுக்கலாம். ஒரு மாட்டை ஏழு நபர்கள் சேர்ந்து கூட்டாகக் குர்பானி கொடுக்கலாம். அதே போல் ஒரு ஒட்டகத்தை ஏழு அல்லது பத்து நபர்கள் சேர்ந்து கூட்டாகக் குர்பானி கொடுக்கலாம்.
12
حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا قَيْسُ بْنُ سَعْدٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحَرَ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ
‎‏
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 14619
‎‏
حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ عِلْبَاءَ بْنِ أَحْمَرَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَحَضَرَ الأَضْحَى فَاشْتَرَكْنَا فِي الْبَقَرَةِ سَبْعَةً وَفِي الْبَعِيرِ عَشَرَةً
‎‏
ﺟﺎﻣﻊ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 1417
‎‏
(குர்பானி என்னும்) அறுத்துப் பலியிடுதலுக்காக ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும், ஒரு மாடு ஏழு நபருக்கும் (கூட்டு சேரப் போதுமானதாகும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: அஹ்மத் 14619
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் வீதமும் நாங்கள் கூட்டுச் சேர்ந்தோம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதீ 1417
Narrated Jabir bin Abdullah (ra):
The Prophet (sal) said:To slaughter a camel on behalf of seven, and a cow on behalf of seven.
[Ahmad 14619]
Narrated Ibn ‘Abbas (ra):
We were with the Messenger of Allah (sal) on a journey when the (Day of) Adha came, so we shared seven for a cow and ten for a camel.
[Tirmidhi 1417]
Blogger Widget