அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களின் சிறப்பு…


தினம் ஒரு ஹதீஸ்-292

حَدَّثَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ : سَمِعْتُ مُسْلِمًا الْبَطِينَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍرَضِيَ اللهِ عَنْهُمَا ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ مَا الْعَمَلُ ، فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْ الْعَمَلِ فِي عَشْرِ ذِي الْحِجَّةِقِيلَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ ، إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ ثُمَّ لَمْ يَرْجِعْ بِشَيْءٍ
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ 1726

துல்ஹஜ்ஜின் (முதல்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வதானது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட மிகவும் சிறந்ததாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள்அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும் தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர) என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: தாரமீ 1726

Narrated Ibn `Abbas (ra):
The Prophet (sal) said, “No good deeds done on other days are superior to those done on (first) ten days of Dhul Hajj“. Then some companions of the Prophet (sal) said, “Not even Jihad for the sake of Allah?” He replied, “Not even Jihad for the sake of Allah, except that of a man who does it by putting himself and his property in danger (for Allah’s sake) and does not return with any of those things.
[Darami 1726]
Blogger Widget