அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

நட்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை…


தினம் ஒரு ஹதீஸ்-415

உன் நண்பனைப் பற்றி சொல்; நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்” என்று ஒரு சொல்வழக்கு உண்டு, சேர்க்கை சரியில்லாததால் தன் வாழ்வைத் தொலைத்தவர்கள் பலர், நாம் நல்லவர்களாக இருப்பது எப்படி முக்கியமோ, அதே போல் நாம் நட்பு கொள்ளக் கூடியவர்களையும் நல்லவர்களாகத் தேர்ந்தேடுப்பதும் முக்கியமானதே, எனவே நாம் யாரிடம் நட்பு வைத்துள்ளோம் என்பதில் கவனமாக இருத்தல் அவசியம்..
حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِر, وَأَبُو دَاوُدَ، قَالَا : حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ : حَدَّثَنِي مُوسَى بْنُ وَرْدَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 4195

ஒருவர் தன் தோழனின் வழியில் தான் இருப்பார், எனவே உங்களில் ஒருவர் யாரிடம் தோழமை கொண்டுள்ளார் என (கவனமாகப்) பார்த்துக் கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 4195

Abu Hurairah (ra) narrated that the Prophet (sal) said, “A man is upon the way of his friend, so let one of you look at whom he be friends.
[Abudawud 4195]
Blogger Widget