அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஒருவருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால்…


தினம் ஒரு ஹதீஸ்-414

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ : حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، قَالَ : حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍأَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا يَسْتَعْمِلُهُ قِيلَ كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ قَبْلَ الْمَوْتِ
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺣﺒﺎﻥ 346

ஒரு அடியாருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவனை பயன்படுத்துவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எப்படி பயன்படுத்துவான்?‘ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்த அடியாரின் மரணத்திற்கு முன் நல்லமல் புரி(ந்த நிலையில் மரணடை)யும் பாக்கியத்தை அவருக்கு வழங்குவான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 346

It was narrated Anas bin Malik (ra) that The Messenger of Allah (sal) said: “When Allah wills good for His slave, He uses him.” They said, “O Messenger of Allah! How does He use him?” The Prophet (sal) said, “He guides him to do good deeds before he dies.
[Ibnhibban 346]
Blogger Widget