அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஜுமுஆவின் இரு உரைகள்…


தினம் ஒரு ஹதீஸ்-175

ஜுமுஆ உரையானது மிம்பரில் நின்றவாறு நடத்தப்படும் இரு உரைகளாகும், முதல் உரை முடித்ததும் அமர்ந்து பின் எழுந்து இரண்டாவது உரையாற்ற வேண்டும். ஆனால் சில பள்ளிகளில் தரையில் நின்றவாறு தமிழில் ஒரு பெரிய உரையும், பின் மிம்பரின் மீது இரு உரைகள் என்ற பெயரில் அரபியில் புத்தகத்தை வாசித்தல் என்றும் செய்யப்படுகிறது, இது பித்அத் ஆகும்.
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَحَسَنُ بْنُ الرَّبِيعِ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَكَانَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم خُطْبَتَانِ يَجْلِسُ بَيْنَهُمَا يَقْرَأُ الْقُرْآنَ وَيُذَكِّرُ النَّاس
صحيح مسلمَ 1564

நபி (ஸல்) அவர்கள் (ஜுமுஆவின்போது) குர்ஆன் (வசனங்களை) ஓதி, மக்களுக்கு நினைவூட்டி இரு (குத்பா) உரைகள் நிகழ்த்துவார்கள். அவ்விரு உரைகளுக்கிடையே அமர்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1564

Narrated Jabir bin Samura (ra):
The Apostle of Allah (sal) gave two sermons between which he sat, recited the Qur’an and exhorted the people.
[Muslim 1564]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget