அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்…


தினம் ஒரு ஹதீஸ்-95

حدثنا أبو بكر محمد بن أبانحدثنا وكيعحدثنا هشام الدستوائيعن بديل بن ميسرة العقيلي عن عبد الله بن عبيد بن عمير عن أم كلثوم عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم طعاما فليقل بسم الله فإن نسي في أوله فليقل بسم الله في أوله وآخره
ﺳﻨﻦ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 1858

உங்களில் ஒருவர் உணவு சாப்பிட (ஆரம்பிக்கும்) போது பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்தில் (பிஸ்மில்லாஹ்) கூற மறந்து விட்டால் “பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி”(ஆரம்பத்திற்காகவும் இறுதிக்காவும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்)என்று கூறட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: திர்மிதி 1858

Narrated ‘Aishah (ra):
The Messenger of Allah (sal) said: “When one of you eats food, then let him say: ‘Bismillah.’ If he forgets in the beginning, then let him say: ‘Bismillahi Fi Awwalihi Wa Akhirihi (In the Name of Allah in its beginning and its end.)
[Tirmidhi 1858]
Blogger Widget