அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

படைப்பினங்களின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருதல்…


தினம் ஒரு ஹதீஸ்-428

وَحَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَأَبُو الطَّاهِرِ، كِلاَهُمَا عَنِ ابْنِ وَهْبٍ، -وَاللَّفْظُ لِهَارُونَ – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ وَأَخْبَرَنَا عَمْرٌو، – وَهُوَ ابْنُ الْحَارِثِ – أَنَّ يَزِيدَ بْنَ أَبِي، حَبِيبٍ وَالْحَارِثَ بْنَ يَعْقُوبَ حَدَّثَاهُ عَنْ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ خَوْلَةَ بِنْتِ حَكِيمٍ السُّلَمِيَّةِ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِذَا نَزَلَ أَحَدُكُمْ مَنْزِلاً فَلْيَقُلْ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ فَإِنَّهُ لاَ يَضُرُّهُ شَىْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْهُ
قَالَ يَعْقُوبُ وَقَالَ الْقَعْقَاعُ بْنُ حَكِيمٍ عَنْ ذَكْوَانَ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا لَقِيتُ مِنْ عَقْرَبٍ لَدَغَتْنِي الْبَارِحَةَ قَالَ أَمَا لَوْ قُلْتَ حِينَ أَمْسَيْتَ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ لَمْ تَضُرُّكَ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 5248

உங்களில் ஒருவர் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும்போது, “அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்” (முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறினால், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்வரை அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுலமிய்யா (ரலி)
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நேற்றிரவு என்னைத் தேள் ஒன்று கொட்டிவிட்டது. அதனால் நான் (நிம்மதியான தூக்கத்தை) இழந்துவிட்டேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ மாலைப் பொழுதை அடையும்போது, “அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்” (முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறியிருந்தால் அது உனக்குத் தீங்கிழைத்திருக்காது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5248

Khaula bint Hakim Sulamiyya (ra) reported:
I heard Allah’s Messenger (sal) as saying: When any one of you stays at a place, he should say,A’udhu bikalimatil-lahit-tammati min sharri ma khalaq” (I seek refuge in the Perfect Word of Allah from the evil of that He created) Nothing would then do him any harm until he moves from that place.
Abu Huraira (ra) reported that a person came to Allah’s Messenger (sal) and said, O Allah’s Messenger!, I was stung by a scorpion during the night. Thereupon he said: Had you recited these words in the evening, “A’udhu bikalimatil-lahit-tammati min sharri ma khalaq” (I seek refuge in the Perfect Word of Allah from the evil of what He created) it would not have done any harm to you.
[Muslim 5248]
Blogger Widget