அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தொழுகை விடுபட்டால்…?


தினம் ஒரு ஹதீஸ்-76

விட்ட தொழுகைகளை களா தொழுகை என்ற பெயரில் தொழ அனுமதியில்லை, அதற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தான் கேட்க வேண்டும். தூக்கம், மறதி ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டும் தொழுகை விடுபட்டால், அவற்றை தொழுது கொள்ள மார்க்கம் அனுமதிக்கிறது.
و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ نَسِيَ صَلَاةً أَوْ نَامَ عَنْهَا فَكَفَّارَتُهَا أَنْ يُصَلِّيَهَا إِذَا ذَكَرَهَا
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1103

ஒரு தொழுகையைத் தொழ மறந்துவிட்ட, அல்லது தொழாமல் உறங்கிவிட்ட ஒருவருக்கு அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 1103

Narrated Anas bin Malik (ra):
The Messenger of Allah (sal) said: “He who forgets the prayer, or he slept (and it was omitted), its expiation is (only) that he should observe it when he remembers it“.
[Muslim 1103]
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
திருக்குர்ஆன் 4:103
அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் பின்னர் இழப்பைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 19:59,60
Blogger Widget