அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இறந்த உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூற வேண்டியவை…


தினம் ஒரு ஹதீஸ்-134

சில பகுதிகளில் இறந்த உடலை கப்ருக்குள் வைக்கும் போது “அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ” என்று கூறுவார்கள், சொல்லப்படும் இவ்வாசகம் எவ்வளவு உயர்ந்ததானாலும் நபி (ஸல்) அவர்கள் இதை எங்கே கூறச்சொல்லியிருக்கிறார்களோ, அங்கே கூறினால் மட்டும் தான் அதற்குரிய நன்மை கிடைக்கும், இதை உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூறினால் அது பித்அத்ஆகி விடும், எனவே உடலை குழிக்குள் வைக்கும் போது எதைச் சொல்ல மார்க்கம் கட்டளை இடுகிறதோ அதைத் தான் கூற வேண்டும்.
حدثنا هشام بن عمار حدثنا إسمعيل بن عياش حدثنا ليث بن أبي سليم عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم ح وحدثنا عبد الله بن سعيد حدثنا أبو خالد الأ حمر حدثنا الحجا جعن نافع عن ابن عمر قال كان النبي صلى الله عليه وسلم إذا أدخل الميت القبر قال بسم الله وعلى ملة رسول اللهوقال أبو خالد مرة إذا وضع الميت في لحده قال بسم الله وعلى سنة رسول الله وقال هشام في حديثه بسم الله وفي سبيل الله وعلى ملة رسول الله
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 1550

இறந்த உடலை கப்ருக்குள் வைக்கும் போது “பிஸ்மில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹ்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அபூ ஹாலித் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், இறந்த உடலை கப்ருக்குள் வைக்கும் போது “பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள் எனவும், ஹிஷாம் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், “பிஸ்மில்லாஹி வஃபீ ஸபீலில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹ்” என்று கூறுவார்கள் எனவும் இடம்பெற்றுள்ளது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 1550

Narrated Ibn ‘Umar (ra):
When the deceased was placed in the grave, the Prophet (sal) would say: ‘Bismillahi, wa ‘ala millati rasul-illah.‘ Abu Khalid (rah) said on one occasion, when the deceased was placed in the grave: “Bismillahi wa ‘ala sunnati rasul-illah.” Hisham (rah) said in his narration: “Bismillahi, wa fi sabil-illah, wa ‘ala millati rasul-illah
[Ibnmajah 1550]
Blogger Widget