அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பிரார்த்தனை தான் வணக்கம்...


தினம் ஒரு ஹதீஸ்-45

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை”என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இப்படியிருக்கும் போது துஆ என்னும் முக்கிய வணக்கத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும், அதை விடுத்து அவ்லியாக்கள் என்ற பெயரில் இறந்தவர்களிடம் சென்று கையேந்தினால் நிரந்தர நரகில் சேர்க்கும் ஷிர்க் என்னும் பாவத்தைச் செய்ததாகி விடும்.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ ذَرٍّ، عَنْ يُسَيْعٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ ثُمَّ قَرَأََ وقالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
ﺳﻨﻦ ﺍﻟﺘﺮﻣﺬﻱ2895

பிரார்த்தனை தான் வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்” என்று உங்கள் இறைவன் கூறுகிறான் (40:60)” என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: திர்மிதீ 2895

Nu’man bin Bashir narrated that: The Prophet (sal) said:
The supplication, is worship.” Then he recited: “And Your Lord said: “Call upon me, I will respond to you. Verily, those who scorn My worship, they will surely enter Hell humiliated (40:60).
[Tirmidhi 2895]
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
திருக்குர்ஆன் 10:106
Blogger Widget