அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இறுதி நபி…


தினம் ஒரு ஹதீஸ்-247

ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﺑَﻜْﺮِ ﺑْﻦُ ﺃَﺑِﻲ ﺷَﻴْﺒَﺔَ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋَﻔَّﺎﻥُ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺳَﻠِﻴﻢُ ﺑْﻦُ ﺣَﻴَّﺎﻥَ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺳَﻌِﻴﺪُ، ﺑْﻦُ ﻣِﻴﻨَﺎﺀَ ﻋَﻦْ ﺟَﺎﺑِﺮٍ، ﻋَﻦِ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗَﺎﻝَ ﻣَﺜَﻠِﻲ ﻭَﻣَﺜَﻞُ ﺍﻷَﻧْﺒِﻴَﺎﺀِ ﻛَﻤَﺜَﻞِ ﺭَﺟُﻞٍ ﺑَﻨَﻰ ﺩَﺍﺭًﺍ ﻓَﺄَﺗَﻤَّﻬَﺎ ﻭَﺃَﻛْﻤَﻠَﻬَﺎ ﺇِﻻَّ ﻣَﻮْﺿِﻊَ ﻟَﺒِﻨَﺔٍ ﻓَﺠَﻌَﻞَ ﺍﻟﻨَّﺎﺱُ ﻳَﺪْﺧُﻠُﻮﻧَﻬَﺎ ﻭَﻳَﺘَﻌَﺠَّﺒُﻮﻥَ ﻣِﻨْﻬَﺎ ﻭَﻳَﻘُﻮﻟُﻮﻥَ ﻟَﻮْﻻَ ﻣَﻮْﺿِﻊُ ﺍﻟﻠَّﺒِﻨَﺔِ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓَﺄَﻧَﺎ ﻣَﻮْﺿِﻊُ ﺍﻟﻠَّﺒِﻨَﺔِ ﺟِﺌْﺖُ ﻓَﺨَﺘَﻤْﺖُ ﺍﻷَﻧْﺒِﻴَﺎﺀَ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 4595

எனது நிலையும் இதர இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டிய மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்டு முழுமையாகவும் நிறைவாகவும் அந்த வீட்டைக் கட்டி முடித்தார். மக்கள் அதனுள் நுழைந்து (பார்வையிட்டுவிட்டு) வியப்படைந்து, “இந்தச் செங்கல்லின் இடம் மட்டும் (காலியாக) இல்லாதிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!” என்று கூறலாயினர். நானே அந்தச் செங்கல்லின் இடத்தில் இருக்கிறேன். நானே நபிமார்களில் இறுதியாக வந்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4595

Jabir (ra) reported Allah’s Messenger (sal) as saying: The similitude of mine and that of the Apostles is like that of a person who built a house and he completed it and made it perfect but for the space of a brick. People entered therein and they were surprised at it and said: Had there been a brick (it would have been complete in all respects). I am that place where the brick (completing the building is to be placed), and I have come to finalise the chain of Apostles.
[Muslim 4595]
Blogger Widget