அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தொழுகைக்குப் பின்…


தினம் ஒரு ஹதீஸ்-249

حَدَّثَنَا أَبُو عَاصِمٍ, حَدَّثَنَا حَيْوَةُ, حَدَّثَنِي عُقْبَةُ بْنُ مُسْلِمٍ, حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيُّ, عَنِ الصُّنَابِحِيِّ, عَنْ مُعَاذٍ, قَالَ : لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا مُعَاذُ, إِنِّي لَأُحِبُّكَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ, وَأَنَا وَاللَّهِ أُحِبُّكَ قَالَفَإِنِّي أُوصِيكَ بِكَلِمَاتٍ تَقُولُهُنَّ فِي كُلِّ صَلَاةٍ اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ, وَشُكْرِكَ, وَحُسْنِ عِبَادَتِكَ
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 21552

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “முஆதே! (அல்லாஹ்விற்காக) நான் உன்னை நேசிக்கின்றேன்” என்று கூறினார்கள், அதற்கு நான் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக, நானும் உங்களை நேசிக்கின்றேன்” என்று கூறினேன். பின் நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வொரு (கடமையான) தொழுகைக்குப் பின்னரும், “அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னீ இபாத(த்)திக்” (யா அல்லாஹ்! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் உதவி செய்வாயாக!) என்று கூறுவதை நீ விட்டு விடாதே! என நான் உனக்கு அறிவுறுத்துகின்றேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்: அஹ்மத் 21552

Narrated Mu’adh (ra):
The Messenger of Allah (sal) said to me: ‘O Mu’adh, verily I love you (for the sake of Allah).‘ I replied: ‘O Messenger of Allah, I swear by Allah that I love you (too).‘ He (the Messenger of Allah (sal)) then said: ‘I advise you to say these words after every prayer: Allahumma a’inni ‘ala dhikrika wa shukrika wa husni ‘ibadatik (O Allah!, help me to remember You, give thanks to You and worship You well.)
[Ahmad 21552]
Blogger Widget