அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

மறுமைநாளில் நிச்சயமாக அல்லாஹ்வைக் காணலாம்…


தினம் ஒரு ஹதீஸ்-197

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَهُ يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ نَاسٌ يَا رَسُولَ اللَّهِ أَنَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ قَالَ هَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ الشَّمْسِ فِي الظَّهِيرَةِ لَيْسَتْ فِي سَحَابَةٍ قَالُوا لاَ قَالَ هَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ لَيْسَ فِي سَحَابَةٍقَالُوا لاَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تُضَارُّونَ فِي رُؤْيَتِهِ إِلاَّ كَمَا تُضَارُّونَ فِي رُؤْيَةِ أَحَدِهِمَا
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 4730

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மறுமைநாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?‘ என்று மக்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?” என்று கேட்டார்கள். மக்கள், ‘இல்லை‘ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், “பெளர்ணமி இரவில் மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?” என்று கேட்டார்கள். மக்கள், ‘இல்லை‘ என்று பதிலளித்தார்கள். “எனது உயிர் எவனது கைவசம் இருக்கிறதோ, அவன் மீது ஆணையாக! இவ்வாறு தான் உங்களுடைய இறைவனை நீங்கள் (மறுமைநாளில் எவ்வித சிரமுமின்றி) காண்பீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 4730

Narrated Abu Hurairah (ra):
O Messenger of Allah! Shall we see our lord, the Exalted, on the Day of resurrection?‘ He replied: “Do you feel any trouble in seeing the sun at noon when it is not in the cloud?‘ They said: ‘No‘. He asked: “Do you feel any trouble in seeing the moon on the night when it is full and not in the cloud?” They replied: ‘No‘. He said: “By him in whose hand my soul is, you will not feel any trouble in seeing him except as much as you feel in seeing any of them“.
[Abudawud 4730]
Blogger Widget