அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

உளூவை முறிக்கும் செயல்களில் ஒன்று...


தினம் ஒரு ஹதீஸ்-78

உளூ செய்யாமல் தொழும் தொழுகை அல்லாஹ்வால் ஏற்கப்படாது. உளூ செய்திருந்தாலும், அதை செய்யாதது போன்று ஆக்கும் செயல்களில் ஒன்று காற்றுப் பிரிதல். காற்றுப் பிரிந்த நிலையில் தொழும் தொழுகையும் அல்லாஹ்வால் ஏற்கப்படாது, அத்தொழுகையை உளூ செய்து மீண்டும் தொழுதாகத் தான் வேண்டும்.
சப்தத்துடனோ, சப்தமின்றியோ காற்றுப் பிரிதல்காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டால் செய்ய வேண்டியது
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ تُقْبَلُ صَلاَةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ قَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ مَا الْحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ قَالَفُسَاءٌ أَوْ ضُرَاطٌ
‎‏
‎رواه ﺍﻟﺒﺨﺎﺭﻱ 135‏
حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَعَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الرَّجُلُ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّىْءَ فِي الصَّلاَةِ فَقَالَ لاَ يَنْفَتِلْ ـ أَوْ لاَ يَنْصَرِفْ ـ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا
‎‏
رواه ﺍﻟﺒﺨﺎﺭﻱ 137‎‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சிறுதுடக்கு (ஹதஸ்) ஏற்பட்டவர் உளூசெய்யும் வரை அவருடைய தொழுகை ஏற்கப்படாது” எனக் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹள்ரமவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் “அபூஹுரைரா (ரலி) அவர்களே! சிறுதுடக்கு என்பது என்ன?” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “சப்தத்துடனோ, சப்தமின்றியோ காற்றுப் பிரிவது” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹம்மாம் பின் முனப்பஹ் (ரஹ்)
நூல்: புகாரி 135
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “தொழும் போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஒருவருக்கு ஏற்படுகிறது (இதனால் உளூ முறிந்து விடுமா?)” என்று முறையிட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(காற்றுப் பிரிவதன்) சப்தத்தைக் கேட்காத வரை அல்லது நாற்றத்தை உணராத வரை (தொழுகையிலிருந்து) வெளியேற வேண்டாம்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி)
நூல்: புகாரி 137
Narrated Hammam bin munabbah (rah):
Abu Huraira (ra) reported that Allah’s Messenger (sal) said: “The prayer of a person who does Hadas is not accepted till he performs the ablution.” A person from Hadaramout asked Abu Huraira (ra), “O Abu Huraira! What is ‘Hadas’?” Abu Huraira (ra) replied, “‘Hadas’ means the passing of wind, with or without sound
[Bukhari 135]
Narrated `Abdullah bin Sai’d bin Asim (ra):
I asked Allah’s Messenger (sal) abouta person who imagined to have passed wind during the prayer. Allah’s Apostle (sal) replied: “He should not leave his prayers unless he hears sound or smells something.
[Bukhari 137]

Blogger Widget