அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -9


தினம் ஒரு ஹதீஸ்-207

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ سَعْدَانَ الْقُبِّيِّ، عَنْ أَبِي مُجَاهِدٍ، عَنْ أَبِي مُدِلَّةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَةٌ لاَ تُرَدُّ دَعْوَتُهُمُ الصَّائِمُ حَتَّى يُفْطِرَ وَالإِمَامُ الْعَادِلُ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا اللَّهُ فَوْقَ الْغَمَامِ وَيَفْتَحُ لَهَا أَبْوَابَ السَّمَاءِ وَيَقُولُ الرَّبُّ وَعِزَّتِي لأَنْصُرَنَّكَ وَلَوْ بَعْدَ حِينٍ
سنن الترمذي 3598

மூன்று பேர் செய்யும் பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது, (அவை:) நோன்பாளி (நோன்பு வைக்கும் நேரத்திலிருந்து) நோன்பு திறக்கும் வரை செய்யும் பிரார்த்தனை, நீதியான அரசனின் பிரார்த்தனை, அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை (ஆகியனவாகும்.) அவற்றை, அல்லாஹ் மேகத்திற்கு மேல் உயர்த்தி, அவற்றிற்காக வானத்தின் வாசல்களையும் திறக்கிறான். (மேலும் அவர்களுக்காக,) “என் கண்ணியத்தின் மீது ஆணையாக! இப்போது இல்லாவிட்டாலும் பிறகாவது நிச்சயம் நான் உங்களுக்கு உதவி செய்வேன்” என்று இறைவன் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 3598

Abu Hurairah (ra) narrated that the Messenger of Allah (sal) said, “There are three whose supplication is not rejected: The fasting person until he breaks his fast, the just leader, and the supplication of the oppressed person; Allah raises it up above the clouds and opens the gates of heaven to it. And the Lord says: ‘By My might, I shall surely aid you, even if it should be after a while.‘”
[Tirmidhi 3598]

துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை பற்றிய முந்தைய பதிவுகள்:  1,2,3,4,5,6,7,8
நோன்பு சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேலும், தொடர்புடைய பிற பதிவு: நோன்பு திறப்பதைத் தாமதிக்கக் கூடாது…


Blogger Widget