அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -1


தினம் ஒரு ஹதீஸ்-82

அனைத்து நேரங்களிலும் துஆ கேட்கலாம் என்றிருந்தாலும், சில நேரங்களில் கேட்கப்படும் துஆக்கள் இறைவனால் உடனடியாக ஒப்புக் கொள்ளப்படுகின்றன, அது போன்ற வேளைகளில் நம் துஆக்களை அதிகமதிகமாக கேட்க வேண்டும், அத்தகைய சந்தர்ப்பங்களை நழுவ விடக் கூடாது.
و حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ وَعَمْرُو بْنُ سَوَّادٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ أَنَّهُ سَمِعَ أَبَا صَالِحٍ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَأَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكْثِرُوا الدُّعَاءَ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 749

ஓர் அடியார் (தொழுகையில்) ஸஜ்தாவில் இருக்கும்போது தம் இறைவனிடம் அதிக நெருக்கமாக இருக்கிறார்.
எனவே, நீங்கள் (ஸஜ்தாவில்) பிரார்த்தனையை அதிகப்படுத்துங்கள்
” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 749

Abu Huraira (ra) reported:
The Messenger of Allah (sal) said: The nearest a servant comes to his Lord is while he is prostrating, so make many supplication (in this state).
[Muslim 749]
Blogger Widget