அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

360 மூட்டிணைப்புகள்…


தினம் ஒரு ஹதீஸ்-250

12
حَدَّثَنَا حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، -يَعْنِي ابْنَ سَلاَّمٍ – عَنْ زَيْدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَلاَّمٍ، يَقُولُ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ فَرُّوخَ، أَنَّهُ سَمِعَ عَائِشَةَ، تَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّهُ خُلِقَ كُلُّ إِنْسَانٍ مِنْ بَنِي آدَمَ عَلَى سِتِّينَ وَثَلاَثِمَائَةِ مَفْصِلٍ فَمَنْ كَبَّرَ اللَّهَ وَحَمِدَ اللَّهَ وَهَلَّلَ اللَّهَ وَسَبَّحَ اللَّهَ وَاسْتَغْفَرَ اللَّهَ وَعَزَلَ حَجَرًا عَنْ طَرِيقِ النَّاسِ أَوْ شَوْكَةً أَوْ عَظْمًا عَنْ طَرِيقِ النَّاسِ وَأَمَرَ بِمَعْرُوفٍ أَوْ نَهَى عَنْ مُنْكَرٍ عَدَدَ تِلْكَ السِّتِّينَ وَالثَّلاَثِمِائَةِالسُّلاَمَى فَإِنَّهُ يَمْشِي يَوْمَئِذٍ وَقَدْ زَحْزَحَ نَفْسَهُ عَنِ النَّارِ
‎‏
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1833
‎‏
حدثنا علي بن الحسن بن شقيقأ خبرنا الحسين بن واقد حدثنا عبد الله بن بريدة عن أبيهقال قال رسول الله صلى الله عليه وسلمفي الإنسان ثلاث مائة وستون مفصلا فعليه أن يتصدق عن كل مفصل في كل يوم بصدقة قالواومن يطيق ذلك يا رسول الله قالالنخاعة تراها في المسجد فتدفنها أو الشيء تنحيه عن الطريق فإن لم تقدر فركعتا الضحى تجزئك
‎‏
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 22528
‎‏
ஆதமின் மக்களில் (மனிதர்களில்) ஒவ்வொருவரும்முந்நூற்று அறுபது மூட்டிணைப்புகளுடன்படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்தமுந்நூற்று அறுபது மூட்டிணைப்புகளின்எண்ணிக்கைக்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃபார்), மக்களின் நடைபாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1833
மனிதனுடைய உடலில்முந்நூற்று அறுபது மூட்டிணைப்புக்கள்உள்ளன. (அவை சரியாக இயங்குவதால், அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூட்டுக்காகவும் தர்மம் செய்ய வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நபித்தோழர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! இது யாருக்குச் சாத்தியமாகும்?‘ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பள்ளிவாசலில் எச்சிலைக் கண்டால் அதை (மணலால்) மூடி விடுவதும், பாதையில் கிடக்கும் (கல், முள் போன்ற) பொருளை அகற்றுவதும் (தர்மம்) ஆகும். இது உனக்கு முடியவில்லை என்றால், லுஹா தொழுகையின் இரண்டு ரக்அத்துக்கள் உனக்குப் போதுமானது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா பின் அல்-ஹுஸைப் (ரலி)
நூல்: அஹ்மத் 22528
Narrated Aisha (ra):
Allah’s Messenger (sal) as said: Every one of the children of Adam has been created with three hundred and sixty joints; so he who declares the Glory of Allah, praises Allah, declares Allah to be One, Glorifies Allah, and seeks forgiveness from Allah, and removes stone, or thorn, or bone from people’s path, and enjoins what is good and forbids from evil, to the number of those three hundred and sixty joints, will walk that day having saved himself from the Fire.
[Muslim 1833]
Narrated Buraydah bin al-Husayab(ra):
The Messenger of Allah (sal) said: A human being hasthree hundred and sixty joints for each of which he must give alms. The people asked him:Who is capable of doing this? He replied: It may be mucus in the mosque which you bury, and something which you remove from the road; but if you do not find such, two rak’ahs in the forenoon will be sufficient for you.
[Ahmad 22528]
மனிதனுக்கு 360 மூட்டிணைப்புகள் (360 Joints) உள்ளதை இன்றைய அறிவியல், உண்மை என நிரூபிக்கிறது, இது சம்பந்தமாக பல மருத்துவ இணையதளங்களிலிருந்து எடுக்கப்பட்ட screenshot ஆதாரங்கள்:




















Blogger Widget