அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -11


தினம் ஒரு ஹதீஸ்-235

أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَخْلَدٍ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ : حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَعْدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْوَةُ ذِي النُّونِ إِذْ دَعَا بِهَا وَهُوَ فِي بَطْنِ الْحُوتِ لا إِلَهَ إِلا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ فَإِنَّهُ لَنْ يَدْعُوَ بِهَا مُسْلِمٌ فِي شَيْءٍ قَطُّ إِلا اسْتَجَابَ لَهُ
ﺍﻟﺴﻨﻦ ﺍﻟﻜﺒﺮﻯ ﻟﻠﻨﺴﺎﺋﻲ 10028

துன்னூன் [மீனுடையவர் / நபி யூனுஸ் (அலை)] அவர்கள் மீனுடைய வயிற்றினுள் இருந்த நேரத்தில், அல்லாஹ்விடம் அவர் செய்த பிரார்த்தனையான, “லா இலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னி குன்து மினழ் ழாலிமீன்” (உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்) என்பதைக் கூறி எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தித்தால், அல்லாஹ் அந்த பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: நஸாயீ / அஸ்-ஸுனன் அல்-குப்ரா 10028

Sa’d bin Abi Waqqas (ra) narrated that the Messenger of Allah (sal) said: “The supplication of Dhun-Nun [The Man of the Fish / Prophet Yunus (alai)] when he supplicated, while in the belly of the whale was: “La Ilaha Illa Anta Subhanaka Inni Kuntu Minaz-Zalimin” (‘There is none worthy of worship except You, Glory to You, Indeed, I have been of the transgressors.)So indeed, no Muslim man supplicated with it for anything, ever, except Allah responds to him.
[Nasaa'i / As-Sunan al-kubra 10028]
மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். “லா இலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னி குன்து மினழ் ழாலிமீன்” (உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்) என்று (மீன் வயிற்று) இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.
திருக்குர்ஆன் 21:87,88
துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை பற்றிய முந்தைய பதிவுகள் 1,2,3,4,5,6,7,8,9,10
Blogger Widget