அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஜனாஸாவைப் பின்தொடர்தலின் ஒழுங்கு…


தினம் ஒரு ஹதீஸ்-422

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிற்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஜனாஸாவை பின்தொடர்வதும் ஒன்று (புகாரி 1240),ஜனாஸாவைத் தூக்கிச் செல்லும் போது நாம் வாகனத்திலும் பின்தொடரலாம், ஆனால் வாகனத்தில் செல்பவர்கள் ஜனாஸாவிற்கு முன்பாக செல்லக் கூடாது, பின்னால் தான் செல்ல வேண்டும், பின்தொடர்தலுக்காக நடந்து செல்பவர்கள் அவர்கள் விரும்பியவாறு ஜனாஸாவின் முன்பாகவோ, பின்வாகவோ நடந்து செல்லலாம், நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர்கள் ஜனாஸாவிற்கு முன்பாக நடந்து சென்றிருக்கிறார்கள் (திர்மிதீ 929). மேலும் ஜனாஸாவானது தோளிலிருந்து இறக்கி தரையில் வைக்கப்படும் வரை உடன் சென்றவர்கள் அமரக் கூடாது, நின்றபடி தான் இருக்க வேண்டும்.
பின்தொடர்வதன் ஒழுங்கு -1பின்தொடர்வதன் ஒழுங்கு -2
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ زِيَادَ بْنَ جُبَيْرٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّهُ ذَكَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ الرَّاكِبُ خَلْفَ الْجَنَازَةِ وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ
‎‏
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻰ 1932‎‏
حَدَّثَنَا مُسْلِمٌ ـ يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ ـ حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا، فَمَنْ تَبِعَهَا فَلاَ يَقْعُدْ حَتَّى تُوضَعَ
‎‏
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 1310
வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர், அவர் விரும்பியவாறு செல்லலாம்; மேலும் சிறுவர்களுக்கும் (ஜனாஸா) தொழுகை நடத்தப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல்: நஸாயீ 1932
ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்; அதைப் பின்தொடர்ந்து செல்பவர் (அது தரையில்) வைக்கப்படும் வரை உட்கார வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 1310
It was narrated from Mughirah bin Shu’bah (ra) that The Messenger of Allah (sal) said: “The rider should move behind the Janazah and the pedestrian may walk wherever he wishes, and the (funeral) prayer should be offered for a child.
[Nasa'i 1932]
It was narrated from Abu Sa`id Al-Khudri (ra) that The Prophet (sal) said, “When you see a funeral procession, you should stand up, and whoever accompanies it should not sit till the coffin is put down.
[Bukhari 1310]
Blogger Widget