அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இரண்டு கீராத்கள் நன்மை கிடைக்க வேண்டுமா…?


தினம் ஒரு ஹதீஸ்-310

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنِي سَالِمُ بْنُ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ ثَوْبَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ صَلَّى عَلَى جِنَازَةٍ فَلَهُ قِيرَاطٌ وَمَنْ شَهِدَ دَفْنَهَا فَلَهُ قِيرَاطَانِ قَالَ فَسُئِلَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْقِيرَاطِ فَقَالَمِثْلُ أُحُدٍ
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 1529

யார் ஜனாஸா தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு “கீராத்’ நன்மையுண்டு; (தொழுகையில் பங்கேற்றதோடு, உடலை) அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம் “கீராத்’ என்றால் என்னவென்பதைப் பற்றி வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், (ஒரு கீராத் என்பது) “உஹுத் மலையளவு (நன்மை)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: இப்னுமாஜா 1529

It was narrated from Shawban (ra) that the Messenger of Allah (sal) said: “Whoever offers the funeral prayer will have one Qirat and whoever attends the burial will have two Qirat.” The Prophet (sal) was asked about the Qirat and he said: “(It is) like Uhud.
[Ibnmajah 1529]
Blogger Widget