அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தொழுகையின் முக்கியத்துவம்…


தினம் ஒரு ஹதீஸ்-388

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ : حَدَّثَنَا سَلَمْةُ بْنُ شَبِيبٍ، قَالَ : حَدَّثَنَا الْمُقْرِئُ، قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ : حَدَّثَنِي كَعْبُ بْنُ عَلْقَمَةَ، عَنْ عِيسَى بْنِ هِلالٍ الصَّدَفِي، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ذَكَرَ الصَّلاةَ يَوْمًا فَقَالَ مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورًا وَبُرْهَانًا وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ ، وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ يَكُنْ لَهُ بُرْهَانٌ وَلا نُورٌ وَلا نَجَاةٌ ، وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ قَارُونَ وَهَامَانَ وَفِرْعَوْنَ وَأُبَيِّ بْنِ خَلَفٍ
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺣﺒﺎﻥ 1497

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தொழுகையைப் பற்றிக் கூறுகையில், “தொழுகையைப் பேணுதலாகத் தொழுது வருபவருக்கு அது கியாமத் நாளில் ஒளியாகவும், (விசாரணையின் போது) ஆதாரமாகவும், ஈடேற்றமாகவும் ஆகிவிடும். அதைப் பேணுதலாகத் தொழாதவர்களுக்கு, அது கியாமத் நாளில் ஒளியாகவோ, (விசாரணையின் போது) ஆதாரமாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. மேலும் தொழுகையை விட்டவர் கியாமத் நாளில்காரூன், ஹாமான், ஃபிர்அவ்ன் மற்றும் உபை பின் கலப் ஆகிய(கொடிய)வர்களுடன் இருப்பார்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 1497

Abdullah bin Amr (ra) reported:
The Prophet (sal) mention prayer one day and he said, “Whoever guards his prayers will have light and clarity and salvation on the Day of Resurrection. Whoever does not guard his prayers will not have light nor clarity nor salvation, and on the Day of Resurrection he will be with Qarun and Haman and Firaun and Ubay bin Khalaf.
[Ibnhibban 1497]
தொடர்புடைய பிற பதிவு:தொழுகையை விட்டால்…? . மேலும், தொழுகைசம்பந்தமாக எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget