அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஆஷூரா நோன்பு வைக்க வேண்டிய நாட்கள்…


தினம் ஒரு ஹதீஸ்-326

ஆஷூரா நாளானது முஹர்ரம் பத்தாவது நாளாகும். ஃபிர்அவ்னின் படைகளை கடலில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காக அன்றைய நாளில் வைக்கப்படும் நோன்பிற்கு ஆஷூரா நோன்பு என்று பெயர். அன்றைய தினம் யூதர்களும் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வழக்கமாக வைத்திருந்ததால் அவர்களுக்கு மாறு செய்யும் வகையில்,முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். எனவே, முஹர்ரம் 9, 10 ஆகிய இரு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறி, முஹர்ரம் 9 வருவதற்குள் மரணித்து விட்டாலும் அவர்கள் கூறியது முஹர்ரம் 9 அன்றும் நோன்பு நோற்க வேண்டுமென்பதாக இருப்பதால் நாமும் முஹர்ரம் 9 மற்றும் முஹர்ரம் 10 ஆகிய இரு தினங்களிலும் நோன்பு நோற்பதே நபிவழியாகும்.
யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஆஷூரா நோன்பை (முஹர்ரம் பத்தாவது நாளுடன்) அதற்கு முந்திய நாளோ (முஹர்ரம் 9) அல்லது அதற்கு பிந்திய நாளோ (முஹர்ரம் 11) (சேர்த்து) நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: அஹ்மத் 2075, இப்னுகுஸைமா 1965, பைஹகீ / அஸ்-ஸுனன் அல்-குப்ரா 7766 & ஃபதாயில் அல்-அவ்ஹாத் 232) என்ற செய்தியை ஆதாரமாக வைத்து சிலர் ஆஷூரா நோன்பை முஹர்ரம் 9, 10 அல்லது முஹர்ரம் 10, 11 ஆகிய நாட்களில் வைக்கலாம் என்று கூறுகின்றனர். இது பலவீனமான செய்தியாகும்.எனவே ஆஷூரா நோன்பை முஹர்ரம் 9, 10 ஆகிய நாட்களில் வைப்பதே சரியானது ஆகும்.
وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، أَنَّهُ سَمِعَ أَبَا غَطَفَانَ بْنَ طَرِيفٍ الْمُرِّيَّ، يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ، بْنَ عَبَّاسٍ – رضى الله عنهما – يَقُولُ حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ – إِنْ شَاءَ اللَّهُ – صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 2088

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, (மக்களுக்கும்) நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன் ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம் பத்தாவது நாள், மற்றும் அதற்கு முன்பு உள்ள முஹர்ரம்) ஒன்பதாவது நா(ள், ஆகிய இரு நாட்க)ளில் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2088

Ibn ‘Abbas (ra) reported that when the Messenger of Allah (sal) fasted on the day of ‘Ashura and commanded that it should he observed as a fast, they (his Companions) said to him: O Messenger of Allah!, it is a day which the Jews and Christians hold in high esteem.Thereupon the Messenger of Allah (sal) said:When the next year comes, In Sha Allah, (God willing) we would observe fast on the 9th But the Messenger of Allah (sal) died before the advent of the next year.
[Muslim 2088]
Blogger Widget