அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

சமைக்கப்பட்ட உணவுகளை உளூ செய்த நிலையில் உண்டால்…


தினம் ஒரு ஹதீஸ்-283

உளூ செய்து விட்டு சமைக்கப்பட்ட உணவுகளை உண்டால் உளூ முறிந்து விடும், தொழுவதற்காக மீண்டும் புதிதாகத் தான் உளூச் செய்ய வேண்டும் என்பது முன்பு சட்டமாக இருந்தது. (முஸ்லிம் 581) பின்னர் அது மாற்றப்பட்டுவிட்டது. (முஸ்லிம் 582) எனவே உளூவோடு (ஒட்டக இறைச்சியைத் தவிர (முஸ்லிம் 588), ஏனைய) சமைத்த உணவுகளை உண்டால் மீண்டும் உளூச் செய்ய வேண்டிய அவசியமில்லை, முதலில் செய்த உளூவே போதுமானது.
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْخَثْعَمِيُّ، حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ قَرَّبْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم خُبْزًا وَلَحْمًا فَأَكَلَ ثُمَّ دَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ بِهِ ثُمَّ صَلَّى الظُّهْرَ ثُمَّ دَعَا بِفَضْلِ طَعَامِهِ فَأَكَلَ ثُمَّ قَامَ إِلَى الصَّلاَةِ وَلَمْ يَتَوَضَّأْ (كَانَ آخِرُ الأَمْرَيْنِ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَرْكَ الْوُضُوءِ مِمَّا غَيَّرَتِ النَّارُ)
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 163, (164)

நான், நபி (ஸல்) அவர்களுக்கு ரொட்டியும், (சமைக்கப்பட்ட) இறைச்சியும் அன்பளிப்பாக வழங்கினேன். அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். பிறகு உளூச் செய்ய தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, (தொழுகைக்காக) அதில் உளூச் செய்தார்கள். பிறகு லுஹர் தொழுதார்கள். பிறகு தனது மிச்ச உணவை கொண்டு வரும்படி கூறி சாப்பிட்டார்கள். பிறகு உளூச் செய்யாமல் தொழலானார்கள். (சமைத்த பொருட்களைச் சாப்பிட்ட பின் (உளூச் செய்தல், உளூச் செய்யாமலிருத்தல் ஆகிய) இரு காரியங்களில், உளூச் செய்யாமலிருப்பதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதியாக நடைமுறைப்படுத்தியதாகும்.)
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: அபூதாவூத் 163, (164)

Narrated Jabir bin ‘Abdullah (ra):
I presented bread and meat to the Prophet (sal). He ate them and called for ablution water. he performed ablution and offered the noon prayer. He then called for the remaining food and ate it. He then got up and prayed and did not perform ablution. (The last practice of the Messenger of Allah (sal) was that he did not perform ablution after taking anything that was cooked with the help of fire.)
[Abudawud 163, (164)]

Blogger Widget