அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

உளூவில் வரம்பு மீறுதல்…


தினம் ஒரு ஹதீஸ்-276

சிலர் உளூ செய்கையில் உடல் உறுப்புகளை பல முறை கழுவி நீரையும் வீணாக்கிக் கொண்டிருப்பார்கள். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், உடல் உறுப்புகளை ஒரு முறை மட்டும் கழுவியும் உளூ செய்யலாம்(புகாரி 157), இரு முறை கழுவியும் உளூ செய்யலாம் (புகாரி 158), (தலைக்கு மஸஹ் செய்வதை ஒரு முறை செய்யலாம், அல்லது இரு முறை செய்யலாம், மூன்று முறை செய்வதற்கு ஆதாரமில்லை. எனவே தலைக்கு மஸஹ் செய்வதைத் தவிர, மற்ற உறுப்புகளை) மூன்று முறை கழுவியும் உளூ செய்யலாம் (நஸாயீ 99, புகாரி 159, 186). அதிகப்பட்சம் மூன்று முறை தான். எந்த உறுப்பையும் மூன்று முறைக்கு மேல் கழுவி உளூ செய்யக் கூடாது.
ﺣﺪﺛﻨﺎ ﻳﻌﻠﻰ ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ ﻋﻦ ﻣﻮﺳﻰ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﺎﺋﺸﺔ ﻋﻦ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﺷﻌﻴﺐ ﻋﻦ ﺃﺑﻴﻪ ﻋﻦ ﺟﺪﻩ ﻗﺎﻝ ﺟﺎﺀ ﺃﻋﺮﺍﺑﻲ ﺇﻟﻰ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺴﺄﻟﻪ ﻋﻦ ﺍﻟﻮﺿﻮﺀ ﻓﺄﺭﺍﻩ ﺛﻼﺛﺎ ﺛﻼﺛﺎ ﻗﺎﻝ ﻫﺬﺍ ﺍﻟﻮﺿﻮﺀ ﻓﻤﻦ ﺯﺍﺩ ﻋﻠﻰ ﻫﺬﺍ ﻓﻘﺪ ﺃﺳﺎﺀ ﻭﺗﻌﺪﻯ ﻭﻇﻠﻢ
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 6646

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து உளூச் செய்யும் முறை பற்றிக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்து காட்டி விட்டு, ‘இது தான் உளூச் செய்யும் முறையாகும். யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் தீங்கிழைத்து விட்டார்; வரம்பு மீறி விட்டார்; அநியாயம் செய்து விட்டார்‘ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: அஹ்மத் 6646

Narrated Abdullah bin ‘Amr (ra):
A man came to the Prophet (sal) and asked him about ablution. He showed him how to perform it washing each part of the body three times. Then he said: ‘This is the ablution, and whoever does more than this, has done evil, transgressed the limits and wronged himself.
[Ahmad 6646]
Blogger Widget