அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அல்லாஹ்வைத் தவிர மற்றவைகளின் மீது சத்தியம் செய்ததன் பரிகாரம்…


தினம் ஒரு ஹதீஸ்-275

சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது மட்டுமே செய்ய வேண்டும், மற்ற எதன் மீதும் (குர்ஆன் உட்பட) சத்தியம் செய்யக் கூடாது, அப்படி மற்றவைகளின் மீது சத்தியம் செய்வதானது இணைவைப்பில் சேர்க்கும் காரியமாகும். அப்படித் தெரியாமல் அல்லாஹ்வைத் தவிர மற்றவைகளின் மீது சத்தியம் செய்து விட்டால் அதற்குப் பரிகாரமாக ‘லா இலாஹ இல்லல்லாஹ்‘ என்று கூறி விட வேண்டும்.
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ بِاللاَّتِ وَالْعُزَّى. فَلْيَقُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُوَمَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أُقَامِرْكَ. فَلْيَتَصَدَّقْ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 6650
‎‏

யார் சத்தியம் செய்யும் போது, லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக!’ என்று கூறிவிட்டாரோ அவர் (இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ்‘ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், வா சூதாடலாம் என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6650

Narrated Abu Huraira (ra):
The Prophet (sal) said, “Whoever swears saying in his oath. ‘By Lat and `Uzza,’ should say, “La Ilaha Illallah” (‘None has the right to be worshipped but Allah); and whoever says to his friend, ‘Come, let me gamble with you,’ should give something in charity.
[Bukhari 6650]
Blogger Widget