அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தொழுகையின் முதல் வரிசையில் நிற்பதன் சிறப்பு…


தினம் ஒரு ஹதீஸ்-272

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، وَأَبُو عَاصِمِ بْنُ جَوَّاسٍ الْحَنَفِيُّ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ مَنْصُورٍ، عَنْ طَلْحَةَ الْيَامِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ، عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَلَّلُ الصَّفَّ مِنْ نَاحِيَةٍ إِلَى نَاحِيَةٍ يَمْسَحُ صُدُورَنَا وَمَنَاكِبَنَا ، وَيَقُولُ لَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْوَكَانَ يَقُولُ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصُّفُوفِ الْأُوَلِ
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 567

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜமாஅத் தொழுகை) வரிசையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதி வரை சென்று (தொழுகைக்காக அணிவகுத்து நிற்பவர்களின்) நெஞ்சுகளையும், தோள்புஜங்களையும் (நேராக இருக்குமாறு) சரி செய்வார்கள். மேலும் “(முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும்” என்று கூறுவார்கள். மேலும், “முதல் வரிசையில் நின்று தொழுபவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிகின்றான். இன்னும் அவனது மலக்குமார்களும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டி பிரார்திக்கிறார்கள்” என்றும் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல்: அபூதாவூத் 567

Narrated Bara’ bin ‘Aazib (ra):
The Messenger of Allaah (sal) used to walk up and down the rows, wiping our shoulders and chests, and he would say, “Do not let your rows be ragged lest this create disharmony in your hearts“, and he used to say, Allah sends down his blessings upon the first row and his angels pray for them.
[Abudawud 567]
Blogger Widget