அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஜமாஅத் தொழுகையின் வரிசை ஒழுங்கை குலைத்தல்...


தினம் ஒரு ஹதீஸ்-72

ஜமாஅத் தொழுகை நடக்கும் போது மக்களுடன் சேராமல் அதைப் புறக்கணிக்கும் வகையில் தனியே நின்று தொழுதாலும், முன் வரிசையில் இடமிருந்தும் வரிசை ஒழுங்கை குலைக்கும் வகையில் வரிசைக்குப் பின்னால் தனியே நின்று தொழுதாலும் அத்தொழுகை செல்லாது.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ عَمْرِو بْنِ رَاشِدٍ، عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ، أَنَّ رَجُلاً، أَنَّ رَجُلاً، صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُعِيدَ الصَّلاَةَ
ﺳﻨﻦ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 231

ஒரு மனிதர் (ஜமாஅத் தொழுகையில் மக்களுடன் சேராமல்) வரிசைக்குப் பின்னால் தனியே நின்று தொழுதார். நபி (ஸல்) அவர்கள் அத்தொழுகையை மீண்டும் தொழுமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: வாபிஸா பின் மஅபத் (ரலி)
நூல்: திர்மிதீ 231

Narrated Wabisah bin Ma’bad (ra):
A man prayed alone behind the rows the Prophet ordered him to repeat the Salah (Prayer).
[Tirmidhi 231]
Blogger Widget