அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தொழுகைக்குப் பின்- 6

தினம் ஒரு ஹதீஸ்-511

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّاغَانِيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو سَلَمَةَ الْخُزَاعِيُّ، مَنْصُورُ بْنُ سَلَمَةَ قَالَ حَدَّثَنَا خَلاَّدُ بْنُ سُلَيْمَانَ، - قَالَ أَبُو سَلَمَةَ وَكَانَ مِنَ الْخَائِفِينَ - عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا جَلَسَ مَجْلِسًا أَوْ صَلَّى تَكَلَّمَ بِكَلِمَاتٍ فَسَأَلَتْهُ عَائِشَةُ عَنِ الْكَلِمَاتِ فَقَالَ ‏ "‏ إِنْ تَكَلَّمَ بِخَيْرٍ كَانَ طَابِعًا عَلَيْهِنَّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَإِنْ تَكَلَّمَ بِغَيْرِ ذَلِكَ كَانَ كَفَّارَةً لَهُ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ ‏"‏ 
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻰ 1344

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சபையில் அமர்ந்து எழும்போதும், அல்லது தொழுகையை நிறைவு செய்த போதும் சில வார்த்தைகளை கூறுவார்கள். அதைப் பற்றி நான் அவர்களிடம் கேட்டபோது, “ஒருவர் சபையில் நல்வார்த்தைகள் பேசியிருந்து இந்த வார்த்தைகளைக் கூறினால் இவை அவைகளுக்கு முத்திரையாக மறுமைநாள் வரை (பாதுகாப்பாக) இருக்கும். அவர் நல்லது அல்லாத வேறு எதையும் பேசியிருந்தால் இந்த வார்த்தைகள் அவைகளுக்கு (பாவ) பரிகாரமாக இருக்கும் (அவ்வார்த்தைகளாவன) : “ சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க , அஸ்தக்ஃபிருக்க வஅதூபு இலைக். (யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன் புகழைக்க கொண்டு உன்னைப் புகழ்கின்றேன். உன்னிடத்தில் மன்னிப்பு தேடி உன்னிடமே திரும்புகின்றேன்)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸாயீ 1344

It was narrated from Aishah (ra) that: When the Messenger of Allah (sal) sat in a gathering or prayed, he said some words, and I asked him about those words. He said: "If he has spoken some good words (and he says this statement of remembrance), it will be a seal for them to preserve them until the Day of Resurrection, and if he has said something other than that, it (these words) will be an expiation for him: 'Subhanak Allahumma wa bihamdika, astaghfiruka wa atubu ilayk (Glory and praise be to You, O Allah, I seek Your forgiveness and I repent to You.)'"
[Nasa'i 1344]

Blogger Widget