அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஜியாரத்திற்கான அனுமதி ...

தினம் ஒரு ஹதீஸ்-482

 حدثنا أبو بكر محمد بن إسحاق الفقيه ، أنبأ أبو المثنى معاذ بن المثنى ، ثنا محمد بن المنهال الضرير ، ثنا يزيد بن زريع ، ثنا بسطام بن مسلم ، عن أبي التياح يزيد بن حميد ، عن عبد الله بن أبي مليكة ، أن عائشة أقبلت ذات يوم من المقابر فقلت لها : يا أم المؤمنين ، من أين أقبلت ؟ قالت : من قبر أخي عبد الرحمن بن أبي بكر ، فقلت لها : أليس كان رسول الله صلى الله عليه وسلم نهى عن زيارة القبور ؟ قالت : نعم ، كان قد نهى ، ثم أمر بزيارتها 
ﺍﻟﻤﺴﺘﺪﺭﻙ ﻋﻠﻰ ﺍﻟﺼﺤﻴﺤﻴﻦ ﻟﻠﺤﺎﻛﻢ 1432

ஒரு நாள் ஆயிஷா (ரலி) அவர்கள் மண்ணறைகளைச் சந்தித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் "இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் அவர்களின் மண்ணறையிலிருந்து வருகிறேன் என்று பதிலளித்தார்கள். மண்ணறைகளுக்குச் செல்லக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லையா? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம் முதலில் தடை செய்திருந்தார்கள். பிறகு அவற்றைச் சந்திக்க ஏவினார்கள்" எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீமுலைகா (ரஹ்)
நூல்: ஹாகிம் / அல்-முஸ்தத்ரக் அலா அல்-ஸஹீஹைன் 1432

Narrated Abdullah Ibn Abi Mulaykah (rah):
Once 'Aishah (ra) returned after visiting the graveyard. I asked, 'O Mother of the Believers, where have you been?' She said: 'I went out to visit the grave of my brother Abdur-Rahman bin AbiBakr.' I asked her: 'Didn't the Messenger of Allah (sal), prohibit visiting graves?' She said, 'Yes, he did forbid visiting graves during the early days, but later on he ordered us to visit them'.
[Hakim / al-Mustadrak alaa al-Sahihain 1432]
Blogger Widget