அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

மர்யம் (அலை) அவர்கள், ஹாரூன் (அலை) அவர்களின் சகோதரியா?


தினம் ஒரு ஹதீஸ்-150

கிறிஸ்தவர்களின் பைபிள் இறைவேதம் கிடையாது என்று நிரூபித்து அவர்களை உண்மை மார்க்கமாம் இஸ்லாத்தின் பால் அழைக்கும் விதமாக, பைபிளில் உள்ள பிழைகள், முரண்பாடுகள், ஆபாசங்கள் ஆகியன பல முஸ்லிம் சகோதரர்களால் பட்டியல் போடப் பட்டு வருகின்றது. அவற்றுக்கு எந்த பதிலும் கிறிஸ்தவர்களால் சொல்ல முடியவில்லை. ஆகவே, அதை மழுப்பும் விதமாக குர்ஆனிலும் முரண்பாடு, தவறு உண்டு என்று கூறி தாங்கள் துளியளவும் சிந்திக்கும் திறனற்றவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர். அப்படி குர்ஆன் மேல் வைக்கப்படும் பொய்க் குற்றச்சாட்டு ஒன்றையும், அதற்கான பதிலையும் இப்பதிவில் காண்போம்.
QURAN 19:27,28
குர்ஆன் 19:27,28 ல் மர்யம் (அலை) அவர்கள் ‘ஹாரூனின் சகோதரியே!’ என்று அழைக்கப்பட்டதாக உள்ளது. ஈஸா (அலை) அவர்களின் தாயான மர்யம் (அலை) அவர்கள் காலம் எது? ஹாரூன் (அலை) அவர்கள் காலம் எது? என்று தெரியாமல் குர்ஆன் தவறு (?) விட்டு விட்டது என்று கூறி தங்கள் அறியாமையை காட்டுகின்றனர். (உலகில் ஹாரூன் என்ற பெயரில் அல்லாஹ்வின் தூதரான ஹாரூன் (அலை) அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்று இவர்கள் நினைத்து விட்டார்கள் போலும்). இது போன்ற வாதம் தற்போது மட்டும் வைக்கப்படவில்லை, நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே வைக்கப்பட்டு, அதற்கு தெளிவாக பதிலும் அளிக்கப்பட்டு விட்டது.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ – وَاللَّفْظُ لاِبْنِ نُمَيْرٍ – قَالُوا حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ أَبِيهِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ لَمَّا قَدِمْتُ نَجْرَانَ سَأَلُونِي فَقَالُوا إِنَّكُمْ تَقْرَءُونَ يَا أُخْتَ هَارُونَ وَمُوسَى قَبْلَ عِيسَى بِكَذَا وَكَذَا فَلَمَّا قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَإِنَّهُمْ كَانُوا يُسَمُّونَ بِأَنْبِيَائِهِمْ وَالصَّالِحِينَ قَبْلَهُمْ
ﺳﻨﻦ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 3155

நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கிணங்க) “நஜ்ரான்’ எனும் ஊருக்கு சென்ற போது அ(ந்நாட்டுக் கிறித்த)வர்கள், “நீங்கள் (குர்ஆனில் மர்யம் (அலை) அவர்களைப் பற்றி) “ஹாரூனின் சகோதரியே!’ என்று ஓதுகிறீர்கள். (ஆனால், ஹாரூன் (அலை) அவர்கள் மூஸா (அலை) அவர்களின் சகோதரர்.) மூஸா (அலை) அவர்களோ ஈஸா (அலை) அவர்களுக்கு பல (நூறு) ஆண்டுகளுக்கு முந்தையவர் ஆயிற்றே! (அப்படியிருக்க, மர்யம் (அலை) அவர்கள், ஹாரூன் (அலை) அவர்களின் சகோதரியாக எப்படி இருக்க முடியும்?)” என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் (இஸ்ரவேலர்கள்) தங்களுக்கு முந்தைய நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர் (அந்த வகையில் ஹாரூன் என்ற பெயரில் மர்யம் (அலை) அவர்களுக்கு ஒரு சகோதரர் இருந்தார்)” என்றார்கள்.
அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி)
நூல்: திர்மிதீ 3155

Mughira bin Shu’ba (ra) reported:
When I came to Najran, they (the Christians of Najran) asked me: You read” O sister of Harun” (i.e, Maryam (alai)) in the Qur’an, whereas Moosa (alai) was born much before Isa (alai).When I came back to Allah’s Messenger (sal) I asked him about that, whereupon he said: They (people of the old age) used to give names (to their persons) after the names of Apostles and pious persons who had gone before them.
[Tirmidhi 3155]
இதே அடிப்படையை வைத்து பைபிளிலும் கேள்வியை எழுப்பலாம் என்பதை மறந்து விட்டனர்.
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான், ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்.
மத்தேயு 1:2
யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான், அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
மத்தேயு 1:16
ஆபிரகாமின் பேரனான யாக்கோபு எப்படி (இயேசுவின் தாய் மரியாளின் காலத்தவரான) யோசேப்பை பெற்றிருக்க முடியும் என்று கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்? (ஹாரூன் என்ற பெயரில் உலகில் ஒருவர் தான் என்றவாறு இவர்களின் வாதம் போல் யாக்கோபு விஷயத்தில் நாம் வைக்க மாட்டோம்.)
Blogger Widget