அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தொழுகையின் ஒற்றைப் படை ரக்அத்கள் முடிந்து எழும் முறை…


தினம் ஒரு ஹதீஸ்-137

தொழுகையில் ஒற்றைப் படை ரக்அத்கள் (1 & 3) முடிந்து இரட்டைப் படை (2 & 4) ரக்அத்களுக்கு எழும் போது சிலர் ஸஜ்தா முடித்ததிலிருந்து அப்படியே எழுந்து நிற்பார்கள். இப்படி செய்யக் கூடாது. ஒற்றைப்படை ரக்அத்களின் இரண்டாம் ஸஜ்தா செய்த பின் சில நொடிகள் இருப்பில் அமர்ந்தப் பின் தான் இரட்டைப் படை ரக்அத்களுக்காக எழ வேண்டும்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ أَخْبَرَنَا هُشَيْمٌ، قَالَ أَخْبَرَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ أَخْبَرَنَا مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ اللَّيْثِيُّ أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي، فَإِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلاَتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 823

நபி (ஸல்) அவர்கள் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தம் தொழுகையின் ஒற்றைப் படையான ரக்அத்களின் போது நிமிர்ந்து உட்காராமல் (அடுத்த ரக்அத்திற்காக) எழ மாட்டார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் அல்லைஸீ (ரலி)
நூல்: புகாரி 823

Narrated Malik bin Huwairis Al-Laisi (ra):
I saw the Prophet (sal) praying and in the odd rak`at, he used to sit for a moment before getting up.
[Bukhari 823]
தொழுகை சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget