அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இஸ்லாத்தில் கவிதை…


தினம் ஒரு ஹதீஸ்-121

இஸ்லாம் கவிதையை அடியோடு நிராகரிக்கவில்லை. மாறாக ஆதரிக்கவே செய்கிறது. “நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு (புகாரி 6145) என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம். கவிதையானது இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு மாற்றமானதாக இருக்கக் கூடாது. உண்மையை சொல்வதாக இருக்க வேண்டும். ஆனால் இன்று சிலர் பொய்களையும், காதல் என்ற பெயரில் ஆபாச வர்ணனைகளையும் கவிதைகளாகப் பதிந்தும் பரப்பியும் வருகின்றனர். இது போன்ற கவிதைகளை இஸ்லாம் தடுக்கிறது.
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِيُّ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ يُحَنِّسَ، مَوْلَى مُصْعَبِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ بَيْنَا نَحْنُ نَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْعَرْجِ إِذْ عَرَضَ شَاعِرٌ يُنْشِدُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خُذُوا الشَّيْطَانَ أَوْ أَمْسِكُوا الشَّيْطَانَ لأَنْ يَمْتَلِئَ جَوْفُ رَجُلٍ قَيْحًا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 4548

(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “அல்அர்ஜ்” எனுமிடத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதரின் வயிற்றில், புரையோடும் அளவுக்குச் சீழ் சலம் நிரம்பியிருப்பது, (அவருடைய உள்ளமானது) கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 4548

Abu Sa`id al-Khudri (ra) reported:
We were going with Allah’s Messenger (sal). As we reached the place (known as) Al-Arj there met (us) a poet who had been reciting poetry. Thereupon Allah’s Messanger (sal) said: Catch the satan, it is better for the belly of any one of you to be stuffed with pus rather than to stuff (one’s mind) with poetry.
[Muslim 4548]
கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 26:224-226
இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை. (அது) அவருக்குத் தேவையுமில்லை.
திருக்குர்ஆன் 36:69
Blogger Widget