அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பிறரை பயமுறச் செய்யக் கூடாது…


தினம் ஒரு ஹதீஸ்-184

حدثنا عبد الله بن نميرحدثنا الأعمشعن عبد الله بن يسار الجهني عن عبد الرحمن بن أبي ليلى قال حدثنا أصحاب رسول الله صلى الله عليه وسلم أنهم كانوا يسيرون مع رسول الله صلى الله عليه وسلم في مسير فنام رجل منهم فانطلق بعضهم إلى نبل معه فأخذها فلما استيقظ الرجل فزع فضحك القوم فقال ما يضحككم فقالوا لا إلا أنا أخذنا نبل هذا ففزع فقال رسول الله صلى الله عليه وسلم لا يحل لمسلم أن يروع مسلما
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 22555

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்களில் ஒருவர் உறங்கி விட்டார். சிலர் (அவரது) அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்து வைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) கூட்டம் சிரித்து விட்டது. நபி (ஸல்) அவர்கள், ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், இவரது அம்புகளை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார்” என்று கூறினார்கள். “ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரலி)
நூல்: அஹ்மத் 22555

Narrated ‘Abdul Rahman bin Abi Laylaa (ra):
The companions of the Messenger of Allah (sal) told us that they were travelling with the Messenger of Allah (sal). A man among them fell asleep and some of them went and took his arrows. When the man woke up, he got alarmed (because his arrows were missing) and the people laughed. The Prophet (sal) said, “What are you laughing at?” They said, “Nothing, except that we took the arrows and he got alarmed.” The Messenger of Allah (sal) said: “It is not permissible for a Muslim to frighten another Muslim.
[Ahamad 22555]
Blogger Widget