அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஜுமுஆவை விடுவதும், நபி (ஸல்) அவர்களின் கோபமும்…


தினம் ஒரு ஹதீஸ்-7

தன்னைக் கொல்ல முயற்சித்தவரைக் கூட மன்னித்த கருணையாளரான முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இவ்விஷயத்தில் எரிக்கும் அளவிற்கு எண்ணம் வந்தது என்று சொல்லியிருக்கிறார்கள் என்றால், ஜுமுஆவை விடுவது எவ்வளவு பாரதூரமான விஷயம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
و حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو إِسْحَقَ عَنْ أَبِي الْأَحْوَصِ سَمِعَهُ مِنْهُ عَنْ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِقَوْمٍ يَتَخَلَّفُونَ عَنْ الْجُمُعَةِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ رَجُلًا يُصَلِّي بِالنَّاسِ ثُمَّ أُحَرِّقَ عَلَى رِجَالٍ يَتَخَلَّفُونَ عَنْ الْجُمُعَةِ بُيُوتَهُمْ
صحيح مسلمَ 1043

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாத சிலர் குறித்து, “நான் ஒருவரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறிவிட்டு, பின்னர் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் (வீட்டில்) இருப்பவர்களை (நோக்கிச் சென்று அவர்களை) வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் 1043

Abdullah bin Mas’ud (ra) reported Allah’s Messenger (sal) as saying about people who are absent from Jumu’a prayer: I intend that I should command a person to lead people in prayer, and then burn those persons who absent themselves from Jumu’a prayer in their houses.
[Muslim 1043]
Blogger Widget