அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஒழிக்கப்படவேண்டிய தர்ஹா வழிபாடு…


தினம் ஒரு ஹதீஸ்-2

ஒரு மனிதரை அடக்கம் செய்யும் போது தோண்டிய மண்ணை எடுத்து அக்குழியை மூடும் போது சிறு மேடாக அந்த கப்ர் இருக்கும், பின் சில நாட்களிலேயே அந்த கப்ர் மண் உள்ளிறங்கி கப்ரே இல்லாத நிலை போல் தரையோடு தரையாகியிருக்கும். இதை அனைத்து ஊர் பொதுமையவாடிகளிலும் காணலாம், ஆனால் தர்ஹா என்ற பெயரில் கப்ரை வணங்கும் இடத்தில் உள்ள அந்த கப்ரோ அந்த கப்ர் வணங்கிகளின் செயலால் உயரமாகவே இருக்கும், இது போன்று உயர்ந்த கப்ர்களுக்கு இஸ்லாத்தில் இடமேயில்லை, அது அழிக்கப்பட வேண்டிய ஒன்று, அப்படிப்பட்ட கப்ரே இஸ்லாத்தில் அனுமதி இல்லை எனும் போது, அதை மையமாக வைத்து அரங்கேறும் அனாச்சரங்கள் எப்படி இஸ்லாத்தில் இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்.
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي، الْهَيَّاجِ الأَسَدِيِّ قَالَ قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَلاَّ أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ لاَ تَدَعَ تِمْثَالاً إِلاَّ طَمَسْتَهُ وَلاَ قَبْرًا مُشْرِفًا إِلاَّ سَوَّيْتَهُ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1764

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச்சிலைக(ள் மற்றும் உருவப்படங்க)ளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரைமட்டமாக்காமல் விடாதீர்!“என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்)
நூல்: முஸ்லிம் 1764

Abu’l-Hayyaj al-Asadi (rah) told that ‘Ali bin Abu Talib (ra) said to him: Should I not send you on the same mission as Allah’s Messenger (sal) sent me. Do not leave an image (and a picture) without obliterating it, or a high grave without levelling It.
[Muslim 1764]
Blogger Widget