அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

உபரித் தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறந்தது…


தினம் ஒரு ஹதீஸ்-337

“உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்! அவற்றை அடக்கஸ்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்!” (புகாரி 432), கடமையான ஐவேளைத் தொழுகைகளை பள்ளியில் தொழுது விட்டு, உபரியான தொழுகைகளை வீட்டில் தொழுது கொள்வதை செயல்படுத்த வேண்டும், உபரியானவைகளையும் பள்ளியில் தொழ அனுமதி இருந்தாலும், வீடுகளில் தொழுவது சிறந்தது, அப்படி எந்த தொழுகையும் செயல்படுத்தப்படாத வீடானது இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கும் மையவாடிக்கு ஒப்பானது.
ثنا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ الْقَيْسِيُّ، ثنا عَفَّانُ، ثنا وُهَيْبٌ، نَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ : سَمِعْتُ سَالِمًا أَبَا النَّضْرِيُحَدِّثُ ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ: أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ ، فَإِنَّ أَفْضَلَ صَلاةِ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلا الْمَكْتُوبَةَ
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺧﺰﻳﻤﺔ 1143

மக்களே! (உபரியானத் தொழுகைகளை) உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள். கடமையான (ஐவேளைத்) தொழுகைகள் தவிர பிற தொழுகைகளை ஒருவர் தனது வீட்டில் தொழுவதே சிறந்தது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்: இப்னுகுஸைமா 1143

Narrated Zaid bin Thabit (ra):
Allah’s Messenger (sal) said, “O People! You should pray in your houses, for the best prayer of a person is that which he prays in his house except the compulsory prayers.
[Ibn Khuzaymah 1143]
தொழுகை சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget