அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

நபியை நேசித்தல்…


தினம் ஒரு ஹதீஸ்-313

நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு மாற்றமாக எவர் என்ன சொன்னாலும் அவைகளைத் தூக்கி எறிந்து விடவேண்டும், நாம் நபி (ஸல்) அவர்கள் கூற்றை மட்டுமே எடுத்துச் செயல்படுத்த வேண்டும், அது தான் நாம் மற்ற அனைவரையும் விட நபி (ஸல்) அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை நேசிக்கிறோம் என்று அர்த்தம், அதை விடுத்து நபிவழி இன்னதென்று தெரிந்தும் மற்றவர்களுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அதைப் புறக்கணித்தால் அவர் உண்மையான இறைநம்பிக்கையாளராக ஆக முடியாது.
أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، وَهَاشِمُ بْنُ الْقَاسِمِ, قَالَا : حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ ، وَوَلَدِهِ ، وَالنَّاسِ أَجْمَعِينَ
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ 2658

உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: தாரமீ 2658

Narrated Anas (ra):
The Prophet (sal) said “None of you will have faith till he loves me more than his father, his children and all mankind.
[Darami 2658]
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.
திருக்குர்ஆன் 33:6
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.
திருக்குர்ஆன் 33:36
Blogger Widget