அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பொறாமைப்பட அனுமதிக்கப்பட்ட இரு விஷயங்கள்…


தினம் ஒரு ஹதீஸ்-255

حَدَّثَنَا شِهَابُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حُمَيْدٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ، رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَسَلَّطَهُ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ، وَآخَرُ آتَاهُ اللَّهُ حِكْمَةً فَهْوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 7141

ஒருவர் தமக்கு இறைவன் அளித்த செல்வத்தை நற்காரியங்களுக்காக அர்ப்பணிக்கிறார்; மற்றொருவர் தமக்கு இறைவன் அளித்த (கல்வி) ஞானத்தால் (மக்களின் பிரச்சினைகளுக்குத்) தீர்ப்பு வழங்கிக் கொண்டும், (தானும் அமல் செய்து பிறருக்கும்) அதைக் கற்பித்துக் கொண்டும் இருக்கிறார்; (இவ்விருவரைப் போல் தாமும் செய்து அதிக நன்மைகளை அல்லாஹ்விடம் பெற வேண்டும் என்ற விதத்தில் இந்த) இரண்டு பண்புகளில் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளலாகாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 7141

Narrated `Abdullah bin Mas’ud (ra):
Allah’s Messenger (sal) said, “Do not wish to be like anyone, except in two cases: A man whom Allah has given wealth and he spends it righteously. A man whom Allah has given wisdom (knowledge of the Qur’an and the Hadith) and he acts according to it and teaches it to others.
[Bukhari 7141]
Blogger Widget