அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பலவீனமான செய்தி -5


சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகை:


மேற்கண்ட புகைப்படமானது முகநூலில் சிலரால் பதியப்பட்டும், பரப்பப்பட்டும் வருகின்றது, இதில் கூறப்பட்டுள்ள செய்தி ஜாமிஉத் திர்மதீயில் இடம்பெற்றும் உள்ளது.

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ زَنْجَوَيْهِ الْبَغْدَادِيُّ وَغَيْرُ وَاحِدٍ قَالَ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ قَرْمٍ، عَنْ أَبِي يَحْيَى الْقَتَّاتِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، رضى الله عنهما قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلاَةُ وَمِفْتَاحُ الصَّلاَةِ الْوُضُوءُ
ﺟﺎﻣﻊ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 4

சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகையாகும், தொழுகையின் திறவுகோல் அங்கத் தூய்மை (உளூ) ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: திர்மிதீ 4

ஆனால் இச்செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல, இச்செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அபூ யஹ்யா அல்கத்தாத் மற்றும் சுலைமான் பின் கர்ம் ஆகிய இருவருமே பலவீனமானவர்கள். எனவே இச்செய்தி ஏற்க இயலாததாகிறது. ஆதலால் இதை எவரும் பரப்ப வேண்டாம்.

பலவீனமான செய்திகள் தொடர்பான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.

குறிப்பு:
தொழுகையின் சிறப்பை, அவசியத்தை உணர்த்தியும், தொழுகையை விடுவதால் ஏற்படும் தீமையைப் பற்றியும் விளக்கும் வகையில் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உண்டு, அதை விட்டு விட்டு தொழுகையின் சிறப்பைக் கூற மேற்காணும் பலவீனமான செய்தியைப் பதிந்து பரப்ப வேண்டாம்.
Blogger Widget