அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பலவீனமான செய்தி -3


ஃகூதா நதி (?):

மேற்கண்ட புகைப்படமானது முகநூலில் சிலரால் பதியப்பட்டும், பரப்பப்பட்டும் வருகின்றது, இதில் கூறப்பட்டுள்ள செய்தி முஸ்னத் அஹ்மதில் இடம்பெற்றும் உள்ளது.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ : قَرَأْتُ عَلَى الْفُضَيْلِ بْنِ مَيْسَرَةَ، عَنْ حَدِيثِ أَبِي حَرِيزٍ، أَنَّ أَبَا بُرْدَةَحَدَّثَهُ ، عَنْ حَدِيثِ أَبِي مُوسَى، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : ” ثَلَاثَةٌ لَا يَدْخُلُونَ الْجَنَّةَ : مُدْمِنُ خَمْرٍ ، وَقَاطِعُ رَحِمٍ ، وَمُصَدِّقٌ بِالسِّحْرِ ، وَمَنْ مَاتَ مُدْمِنًا لِلْخَمْرِ ، سَقَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ نَهْرِ الْغُوطَةِ ” ، قِيلَ : وَمَا نَهْرُ الْغُوطَةِ ؟ قَالَ : ” نَهْرٌ يَجْرِي مِنْ فُرُوجِ الْمُومِسَاتِ ، يُؤْذِي أَهْلَ النَّارِ رِيحُ فُرُوجِهِمْ
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 19132

நிரந்தரமாக மது அருந்துபவன், உறவுகளைப் பேணாதவன், சூனியத்தை (உண்மை என்று) நம்புபவன்” ஆகிய மூவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள், எவன் மது அருந்துபவனாக இருந்த நிலையில் மரணம் அடைந்தானோ அவனுக்கு அல்லாஹ் ஃகூதா எனும் நதியிலிருந்து நீர் புகட்டுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஃகூதா நதி என்பது என்ன? என்று நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது விபச்சாரிகளின் மர்ம உறுப்புகளில் இருந்து வழிந்தோடும் நீர் ஆகும். அதன் துர்நாற்றம் நரகவாசிகளை மேலும் வேதனையில் ஆழ்த்தும்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: அஹ்மத் 19132

ஆனால் இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதல்ல. இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அபூ ஹரீஸ் (அப்துல்லாஹ் பின் அல்ஹுஸைன்) என்பவர் பலவீனமானவர் ஆவார். எனவே இச்செய்தி ஏற்க இயலாததாகிறது. ஆதலால் இதை எவரும் பரப்ப வேண்டாம்..

பலவீனமான செய்திகள் தொடர்பான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget