அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஸலவாத் சொல்வது எப்படி? -2

தினம் ஒரு ஹதீஸ்-437

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَذَا التَّسْلِيمُ فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ قَالَ ‏"‏ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ 

4798 ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ

நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! இது (தங்கள் மீது) ஸலாம் கூறும் முறை. (தொழுகையில் ஓதப்படும் அத்தஹிய்யாத் மூலம் இதனை நாங்கள் அறிவோம்.) ஆனால், உங்கள் மீது நாங்கள் ஸலவாத் சொல்வது எப்படி? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக்க வ ரசூலிக்க கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம் (இறைவா! இப்ராஹீம் நபியின் மீது நீ அருள் புரிந்தது போல் உனது அடிமையும், உனது தூதருமான முஹம்மது அவர்கள் மீதும் அருள் புரிவாயாக! மேலும், இப்ராஹீம் நபிக்கு நீ பாக்கியம் செய்தது போல் முஹம்மது அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாக்கியம் செய்வாயாக!) என்று சொல்லுங்கள் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 4798

It was narrated that abu Sa'eed Al-Khudri (ra) said:

"We said: 'O Messenger of Allah (sal), (We know how to send) this salam upon you, but how should we send salawat upon you?' He said: 'Say: "Allahumma salli 'ala Muhammadin 'abdika wa rasulika kama salaita 'ala Ibrahim wa barik 'ala Muhammadin wa 'ala ali Muhammadin kama barakta 'ala Ibrahim (O Allah, send blessings upon Muhammad, Your slave and Messenger , as You sent blessings upon Ibrahim, and send blessings upon Muhammad and upon the family of Muhammad as You sent blessings upon Ibrahim).
[Bukhari 4798]


தொடர்புடைய பிற பதிவுகள்:
Blogger Widget