அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பலவீனமான செய்தி -2


நற்செயல்களை அழிக்கும் பொறாமை (?):
மேற்கண்ட புகைப்படமானது முகநூலில் சிலரால் பதியப்பட்டும், பரப்பப்பட்டும் வருகின்றது, இதில் கூறப்பட்டுள்ள செய்தி அபூதாவூதில் இடம்பெற்றும் உள்ளது.
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ صَالِحٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، – يَعْنِي عَبْدَ الْمَلِكِ بْنَ عَمْرٍو -حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي أَسِيدٍ، عَنْ جَدِّهِ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ إِيَّاكُمْ وَالْحَسَدَ فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ أَوْ قَالَ الْعُشْبَ
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 4259

பொறாமையைத் தவிர்த்து கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு, விறகை அழிப்பதைப் போல், பொறாமை நற்செயல்களை அழித்து விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 4259
ஆனால் இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதல்ல. இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் இப்ராஹிம் பின் அபீஉஸைத் என்பவர் இச்செய்தியை தனது தாத்தாவிடமிருந்து அறிவிக்கிறார். அவர் தான் இதை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார். ஆனால் இப்ராஹிம் பின் அபீஉஸைத் என்பவரின் தாத்தா யாரென்று அறியப்படாதவர் (மஜ்ஹூல்) ஆவார். எனவே இச்செய்தியை ஏற்க இயலாது.

குறிப்பு:
இச்செய்தியை ஏற்க இயலாது, பலவீனம் என்றவுடன் பொறாமைப்படலாம் என்று நாம் கூறுவதாக விளங்கிக் கொள்ளக் கூடாது, ஏனெனில் இப்படி எதிர்மறையாக புரிந்து கொண்டு எம்முடன் வீண்விவாதம் செய்ய வந்த சம்பவங்களும் நடந்ததுண்டு, பொறாமை என்பது தீய குணம் தான், அதைத் தடை செய்யும் வகையில் ஏராளமான குர்ஆன் வசனங்கள், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உண்டு, ஆனால் மேற்கண்ட செய்தியை அதற்கான ஆதாரமாகக் காட்டக் கூடாது என்பது தான் நாம் சொல்வது.
பலவீனமான செய்திகள் தொடர்பான எமது தளத்தின் முந்தைய பதிவைக் காண,இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget