அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஜுமுஆ தொழுகையை விடுதல்...


தினம் ஒரு ஹதீஸ்-63

ஜுமுஆ தொழுகையைக் கைவிடுவதானது, அவரை அலட்சியவாதியாக்கும் விதத்தில் அவரின் உள்ளத்தின் மீது அல்லாஹ் முத்திரை பதித்து விடுவான் என்று சென்ற பதிவில் பார்த்தோம். அது எத்தனை ஜூமுஆக்கள் என்பதைப் பற்றியதானது இப்பதிவு:
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ عَبِيدَةَ بْنِ سُفْيَانَ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي الْجَعْدِ الضَّمْرِيِّ، وَكَانَتْ، لَهُ صُحْبَةٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ تَرَكَ ثَلاَثَ جُمَعٍ تَهَاوُنًا بِهَا طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻲ 1378

அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் ஜஃது (ரலி)
நூல்: நஸாயீ 1378

Narrated Abul Ja’d (ra): The Prophet (sal) said:
Whoever missed three jumu’ahs out of negligence, Allah will place a seal over his heart.
[Nasa'i 1378]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget