அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தூங்கும் முன் மற்றும் விழித்தெழுந்த பின் ஓதும் துஆ...


தினம் ஒரு ஹதீஸ்-75

حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا وَإِذَا قَامَ قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
رواه ﺍﻟﺒﺨﺎﺭﻱ 6312

நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும் போது, “பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா(இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். (உறக்கத்திலிருந்து) எழும் போது, “அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்” (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: புகாரி 6312

Narrated Hudhaifa (ra):
When the Prophet (sal) went to bed, he would say: “Bismika amutu wa ahya.” (O Allah!, in Your Name I die and live), and when he got up he would say: “Al-hamdu lil-lahil-ladhi ahyana ba’da ma amatana wa ilaihin-nushur” (Praise be to Allah who gave us life after He made us die, and to Him is the resurrection).
[Bukhari 6312]
Blogger Widget